India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரத்தில், முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டம் வாயிலாக முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். இவ்வாய்ப்பை காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். மேலும் தகவல்களுக்கு 044 22262023 என்ற எண்ணில் அழைக்கலாம். ஷேர் செய்யுங்கள்
ரமலான் கூட்ட நெரிசலைக் குறைக்க திருச்சி – தாம்பரம் ஜன் சதாப்தி சிறப்பு விரைவு ரயிலானது (06048) வரும் 29, 30, 31 ஆம் தேதி வரையும், மறுமார்க்கமாக தாம்பரம் – திருச்சி ஜனசதாப்தி சிறப்பு விரைவு ரயிலானது (06047) வரும் 29, 30, 31 ஆம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது என திருச்சிராப்பள்ளி கோட்டை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சி நகரப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று மார்ச் 22, நடைபெற்றது. அந்த வகையில் பொதுமக்கள் அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அவர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் நேரு, விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
நீலகிரியில் தேயிலைக்கு அடுத்து மலைத்தோட்ட பயிர்களான கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் பல நூறு ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்படுகின்றன. தற்போது கேரட் அறுவடை நடந்துவரும் வேளையில் கேத்தி- பாலாடாவில் அறுவடை செய்யப்பட்ட கேரட் அப்பகுதியிலுள்ள இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டபோது, அரை கிலோ எடை உள்ள ஆறு விரல்களுடன் கூடிய அதிசய கேரட் இருப்பதை தொழிலாளர்கள் பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து வியந்தனர்.
நாமக்கலைச் சேர்ந்தவர் அதிமுக நிர்வாகி காந்தி முருகேசன். இவர் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை நிர்வகித்து கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளுக்கு பல்வேறு பொறுப்புகளை அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக இலக்கிய அணி இணைச் செயலாளராக காந்தி முருகேசன் அறிவிக்கப்பட்டுள்ளார், அவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
திருப்பூர் உடுமலை யூனியன் ஆபீஸ் அருகில் உள்ள உணவகத்தில் 24 மணி நேரமும் முறைகேடாக மதுக்கடை அமைத்து மது விற்பனை நடைபெற்று வருகின்றது. காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். மேலும் நகராட்சி பகுதியில் அர்பன் வங்கி அனுஷம் திரையரங்கம் பின்புறம் பஸ் நிலையம் ராஜேந்திர ரோடு பகுதியில் பேரணி முறைகேடாக மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
நாகப்பட்டினம் நீலா தெற்கு வீதியில் அமைக்கப்பட்டுள்ள பொன்னி சித்திர கடல் ஆர்ட் அகடாமியில் ஒவிய திறனை வெளிக்கொணரும் வகையில் திறமை மிக்க ஆசிரியர்களை கொண்டு இலவசமாக ஓவிய பயிற்சி அளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு Nagai Art Academy என்ற சமூக வலைதளத்தை பின்பற்றி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எர்ணாவூர் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் அனிதா (14). அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் இவர், நேற்று (மார்.22) இரவு ஈரக்கையால் செல்போனை சார்ஜ் போட்டுள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். பதறிய பெற்றோர், சிறுமியை தூக்கி கொண்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஈரக்கையால் சுவிட்ச் அல்லது செல்போனை சார்ஜ் போடாதீர்கள்.
குமரி மாவட்டத்தில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் புகழ்வாய்ந்தது. இங்கு பகவதி அம்மன் சுயம்புவாக புற்றுவடிவில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இங்கு மண் சோறு உண்டால் பிள்ளை வரம் கிடைக்கும். தாலி காணிக்கை செலுத்தினால் திருமண வரம் கிட்டும் என்பதும் நம்பிக்கை. 27 தீபங்கள் ஏற்றி, அம்மனை 9 முறை சுற்றி வந்தால் தோஷங்கள் யாவும் நீங்கும். நைவேத்தியம் செய்து வழிபட்டால் மண்டையிடி குணமாகும்,
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் எரிவாயு நுகர்வோர்களுக்கான கூட்டம் நடைபெற உள்ளதாகவும் இதில் நுகர்வோர்கள் பங்கேற்று எரிவாயு உருளை பதிவு செய்தல் மற்றும் விநியோகத்தல், குறைபாடுகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.