India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்,நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதில் கரூரில் மட்டும் 48 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். இங்கு <
அக்னிவீர் ஆட்சேர்ப்பு தேர்வுக்கு மார்ச் 12 முதல் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுநிலை தகுதி, மருத்துவ தகுதி நிலை, உடற்தகுதி நிலை, விதிமுறைகள், நிபந்தனைகள், இணையதள விண்ணப்பங்கள் நிரப்புவதற்கான மற்றும் அக்னிவீர் ஆட்சேர்ப்பு பதிவு பற்றி விரிவான தகவல்களை www.joinindianarmy.nic.in இணையத்தில் பதிவுசெய்ய என திருப்பூர் கலெக்டர் அழைப்புவிடுத்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்,நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சேலம் கோட்டத்தில் 486 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். <
கே.வி.குப்பம் மேல்மாயில் பகுதியை சேர்ந்த யசோதம்மாள் (70). இவரது வீட்டில் நேற்று திடீரென மின்வயர்களில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயில் சிக்கிய யசோதம்மாள் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர். அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கே.வி. குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பகல் 12 மணி முதல் 3 மணிவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் ஆலோசனை தெரிவித்துள்ளார். உடல் வெப்பத்தை தணிக்க அவ்வப்போது தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, கஞ்சி, கூழ், பழச்சாறு, இளநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ். கலவை ஆகியவற்றை அருந்த வேண்டும் என்று கலெக்டர் ஆலோசனை கூறினார்.
திலாசுப்பேட்டையை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் ஆன்லைன் மூலம் வேலை தேடியபோது, சிங்கப்பூரில் உள்ள நிறுவனம் ஒன்றின் HR என்று மர்ம நபர் ஒருவர் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு, அவரை உதவி மேலாளர் பணிக்கு தேர்வு செய்திருப்பதாகவும், இதற்காக சேவை கட்டணமாக ரூ.5000 செலுத்துமாறு கூறி பண மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனை SHARE செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்க…
சேலம் மார்ச் 23 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 7 மணி ‘போதையில்லா தமிழகம்’ என்பது வலியுறுத்தி தன்னார் அமைப்புகள் சார்பில் மாரத்தான் (காந்தி ஸ்டேடியம்) ▶️ காலை 10மணி மாவீரன் பகத்சிங் வீர வணக்கம் (செவ்வாய்பேட்டை) ▶️காலை 10 மணி செவ்வாய்பேட்டை நெல் அரிசி உற்பத்தியாளர்கள் (சங்க மாவட்ட கூட்டம்) ▶️மாலை 5 மணி அனைத்து மணிகள் சங்க கூட்டமைப்பு பேரவை கூட்டம் (சீலநாயக்கன்பட்டி)
பெரம்பலூர் நெடுவாசல் பிரிவு சாலை அருகே மினி பஸ் மீது கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியதில் பஸ்சின் முன்பக்கம் சேதமடைந்து 4 பயணிகள் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் மார்ச் 31 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதற்காக குமரி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது தாம்பரத்தில் இருந்து மார்ச் 28 மாலை 6 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு குமரி சென்றடையும். மார்ச் 31 அன்று இரவு 8.30 மணிக்கு குமரியில் புறப்பட்டு, மறுநாள் காலை 8.55 க்கு தாம்பரத்தில் வந்தடையும். இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
கொலவை ஏரி செங்கல்பட்டு மாவட்ட நகரில் அமைந்துள்ளது. இது இம்மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். மதுராந்தகம் ஏரி முதலிடத்தில் இருக்கிறது. இந்த ஏரியானது செங்கல்பட்டு இரயில் நிலையத்தின் அருகிலேயே உள்ளது. இந்த ஏரியில் மீசைக் கடற்பறவை, இந்திய புள்ளி-பில் வாத்துகள், மூர்ஹென்கள், கூட்ஸ் போன்ற புலம்பெயர்ந்த பறவைகள் உள்ளன. தற்பொழுது ஏரியின் ஆக்கிரமிப்பால் தண்ணீர் குறைந்து வருகிறது. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.