Tamilnadu

News March 23, 2025

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் 

image

கோடை வெயில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், வெயில் தாக்கத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்ள வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது. மோர், இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றைப் பருகலாம். வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆஸ்பிரின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகளை கொடுக்கக்கூடாது என மாவட்ட கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார்.

News March 23, 2025

கூலித் தொழிலாளி தோட்டத்தில் தற்கொலை

image

சிவகாசி அருகே கட்டளைபட்டி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பொன்னுச்சாமி (48). இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையாகி சம்பளப் பணத்தை மனைவிக்கு கொடுக்காமல் இருந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ராமலட்சுமி குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் மன உளைச்சலடைந்த பொன்னுச்சாமி நேற்று அருகில் உள்ள தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News March 23, 2025

திருச்சி ரயில்வே முக்கிய அறிவிப்பு

image

ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் ரயில் பயணிகளின் நலன் குறித்து தொடர்ந்து முக்கிய அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ரயிலில் பயணம் செல்லும் பயணிகள் ரயில்வே தண்டவாளங்களை கடப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, விலை மதிப்புள்ள உங்கள் உயிரை இழக்க வேண்டாம் எனவும், பிளாட்பாரங்களுக்கு செல்ல, மேல்தளம் அல்லது சப்வே உபயோகப்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது.

News March 23, 2025

தீ விபத்தில் வீட்டை இழந்தவர்களுக்கு நிவாரண உதவி

image

சீர்காழி அருகே காத்திருப்பு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவரது மனைவி தீபா. இவரது கூரை வீடு இரு தினங்களுக்கு முன்பு தீப்பிடித்து எரிந்து முழுவதும் சேதம் அடைந்தது. இதனை அறிந்த சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட தீபாவை நேரில் சந்தித்து நிதி உதவியும் நிவாரண பொருட்களையும் வழங்கி ஆறுதல் கூறினர்.

News March 23, 2025

திருச்சியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டிய கமிஷனர்

image

திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 2025 பிப்ரவரி மாதத்திற்கான கலந்தாய்வு கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகர காவல் துணை ஆணையர் சிபின் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி மாநகர காவல் ஆணையர் காமினி பாராட்டினார்.

News March 23, 2025

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.

News March 23, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (மார்ச்.22) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News March 23, 2025

திருவண்ணாமலை: திமுக அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை.

image

திருவண்ணாமலை: உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து திமுக தலைமை அறிவிப்பின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொது இடங்கள் தேசிய, மாநில, மாவட்ட நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள திமுக கொடி கம்பங்களை அகற்றி 31.3.25க்குள் அது பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும் என திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட, ஒன்றிய நகர பேரூர் மற்றும் வார்டு நிர்வாகிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை.

News March 22, 2025

தென்காசி: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்திற்கு தினந்தோறும் காவல் துறை கண்காணிப்பாளர் அதிகாரிகள் சார்பில் இன்று (22.03.25)இரவு நேர ரோந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன மேலும் உங்களது தேவையான உதவிகள் மற்றும் குறைகளை மேற்கண்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் அல்லது 98840 42100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 22, 2025

துணை முதல்வர் கோவை பயணம் ஒத்திவைப்பு

image

கோவை மாவட்டத்தில் நாளை (23-03-2025) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், தற்பொழுது தவிர்க்க இயலாத காரணங்களால், இந்த சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!