India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உச்சிப்புளி, மோகன்குமார்(36), பிரியங்கா தம்பதியினர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் மோகன்குமார் மனைவியை சமரசம் செய்து அழைத்து வர தனது உறவினர்கள் காளிதாஸ், வானீஸ்வரன் ஆகியோருடன் முத்துப்பேட்டை சென்றார். சமரசம் பேசியதில் வாக்குவாதம் முற்றியதில் பிரியங்கா தரப்பினர் மூவருக்கு கத்தி குத்து ஏற்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட இருவரை திருப்புல்லாணி போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில் கோடைகாலத்துக்கான ஆர்டர்கள் மார்ச் மாதம் முடிய போதுமான அளவில் உள்ளன. இதனால் ஆடை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வரும் நேரத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றனர். வடமாநிலங்களில் இருந்து திருப்பூர் வந்த ரெயில்களில் நேற்று வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து இறங்கினர்.
குலசேகரப்புதூரைச் சேர்ந்தவர் வைரவன். இவரும், இவரது நண்பர் முகேஷ் என்பவரும் கோவில் திருவிழாவிற்கு சென்றபோது அங்கு நடந்த தகராறில் வைரவன், இசக்கி ராஜா, முகேஷ் ஆகியோர் தடுத்து தகராறை விலக்கி விட்டனர். இந்நிலையில் குலசேகரன்புதூர் சந்திப்பில் அவர்கள் நிற்கும் போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை அரிவாளால் வெட்டியது. இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை ஏற்று, அதன்படி, நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து நகர, ஒன்றிய, பேரூர் பகுதிகளில் பொது இடங்களில் அமைந்துள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை உடனே அகற்றி அதன் விவரங்களை மாவட்ட அலுவலகத்தில் வரும் மார்ச் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
பீகாரை சேர்ந்தவர் சர்பரேக் ஆலம் (20). இவர் பழவூர் அருகே உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (மார்ச்.22) குவாரிக்கு புதிய இயந்திரம் வந்துள்ளது. இதனை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்ததில் சர்ப்ரேக் ஆலம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம் அருகே உள்ள வி.ஐ.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). நேற்றிரவு ஆறுமுகம் ராசிபுரத்தில் இருந்து டூவீலரில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அவர் ராசிபுரம் டவுன் சேலம் ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, சேலத்தில் இருந்து ராசிபுரத்திற்கு வந்த அரசு டவுன் பேருந்தும், டூவீலரும் மோதிக் கொண்டன. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் பள்ளத்துரை சேர்ந்தவர் பழனி என்ற பழனிச்சாமி.இவர் மீது 2023ம் ஆண்டு காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. அப்போது பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் சாட்சி சொல்ல வரவில்லை.இதை தொடர்ந்து அவருக்குப் பிடி வாரன்ட் பிறபித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தி.மலை, செங்கம் அருகே 8 வயது சிறுவன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது சமையல்காரராக பணிபுரிந்து வரும் 45 வயதான முருகன் என்பவர் மது போதையில் அந்த சிறுவனை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின் சிறுவனின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அவ்வழியே வந்த சிலர் முருகனை பிடித்து அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வாழப்பாடி அடுத்த மாரியம்மன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ் (27). அவரது மனைவி வனிதா (23). கடந்த 14ல், வாழப்பாடி அரசு பஸ் டிப்போ அருகே வனிதா சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சேலம், கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த வனிதாவின் முன்னாள் காதலர் வேடராஜி (26), வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கினார். இந்தநிலையில்வாழப்பாடி போலீசார் நேற்று, வேடராஜை கைது செய்தனர்.
வடுவூர் காவல் சரகம் தனிப்பிரிவு காவலர்களுக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து வடுவூர் காவல்துறையினர் அத்திக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் வீட்டை சோதனை செய்தனர். அப்போது அங்கு ரூ.1,10 ,000 மதிப்பிலான குட்கா பொருட்கள் மொத்த விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக காவல்துறையினர் முத்துசாமியை கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.