Tamilnadu

News March 23, 2025

சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

சென்னையில் இன்று (மார்.23) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் செய்யுங்கள்

News March 23, 2025

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

image

பீஹாரை சேர்ந்தவர் சுனில் (28) . இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளார். இந்த நிலையில் கூலி வேலைக்கு செல்வதற்காக சுனில், தனது 11 நண்பர்களுடன் சங்கமித்ரா ரயிலில் மைசூருக்கு நேற்று (மார்ச்.22) சென்றுள்ளார். ஆம்பூரை அடுத்த சின்ன கோமேஸ்வரம் பகுதியில் ரயில் சென்று கொண்டிருக்கும் போது படிக்கட்டில் பயணம் செய்த சுனில் எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.

News March 23, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விபத்தில் மரணம் 

image

திருவண்ணாமலை அருகே நேற்று (மார்ச் 22), பிக்கப் வாகனம் சாலை விபத்தில் சிக்கியதில் வாகனத்தில் சென்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பாப்பானூர் கிராமத்தில் வசிக்கும் தமிழரசன் என்பவர் நிகழ்விடத்திலேயே இறந்து விட்டார். உடனிருந்த மற்ற இருவரில் தென்னரசு என்பவருக்கு பலத்த காயமும் செந்தில் என்பவருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் சோகமடைந்தனர்.

News March 23, 2025

திண்டுக்கல் மாவட்டத்திற்கு மழை

image

திண்டுக்கல்லில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், இன்று மாவட்டத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில் மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க, Share பண்ணுங்க.

News March 23, 2025

மதுரை இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்

image

சிவகங்கை,பள்ளத்துரை சேர்ந்தவர் பழனி என்ற பழனிச்சாமி. இவர் மீது 2023ம் ஆண்டு காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்தனர். அப்போது பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின், நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரவில்லை.இதை தொடர்ந்து அவருக்குப் பிடி வாரன்ட் பிறபித்து நீதிபதி உத்தரவிட்டார். தற்போது சில்வியா ஜாஸ்மின் மதுரையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார்.

News March 23, 2025

கரூர்: மனைவி கண்முன்னே கணவன் பலி

image

குளித்தலை அருகே உள்ள கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 55). இவர் தனது மனைவி புவனேஸ்வரியுடன் டூவிலரில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். கூடலூர் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த சரக்கு வேன் ஒன்று முருகானந்தம் புவனேஸ்வரி சென்ற டுவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகானந்தம், உயிரிழந்தார். இந்த விபத்து குறித்தகுளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 23, 2025

சங்கரன்கோவில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு

image

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரன் நாராயணர் கோவிலில் ஆண்டு தோறும் மார்ச், செப். மாதங்களில் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை மூன்று நாட்கள் அதிகாலையில் சூரிய உதயத்தின் போது சூரிய ஒளி மூலவர் மீது விழும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதேபோன்று மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடைபெற்றது. இதனை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். *ஷேர்

News March 23, 2025

போக்சோ வழக்கில் இளைஞருக்கு சிறை

image

நாகையை சேர்ந்த ராகேஷ் சர்மா (37)  7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ சட்டத்தில் 14/ 9/2023 இல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நேற்று நீதிபதி கார்த்திகா தீர்ப்பளித்தார். அதில் ராகேஷ் சர்மாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் வழங்க நாகை ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

News March 23, 2025

ஈரோட்டில் கனமழை எச்சரிக்கை

image

ஈரோடு கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், இன்று மாவட்டத்தின் சில பகுதிகளில் காலை7 மணி வரை, கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News March 23, 2025

வளத்தி அருகே கார் மோதி நடந்த சென்ற பள்ளி மாணவி பலி

image

வளத்தி அடுத்த சண்டிசாட்சி தோட்டிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் தீபிகா அண்ணமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நீலாம்பூண்டியில் செஞ்சி சேத்பட் சாலையில் நேற்று காலை கடைக்கு செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த கார் தீபிகாவின் பின்னால் மோதியதில் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!