India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மார்ச் 23 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 7 மணி ‘போதையில்லா தமிழகம்’ என்பது வலியுறுத்தி தன்னார் அமைப்புகள் சார்பில் மாரத்தான் (காந்தி ஸ்டேடியம்) ▶️ காலை 10மணி மாவீரன் பகத்சிங் வீர வணக்கம் (செவ்வாய்பேட்டை) ▶️காலை 10 மணி செவ்வாய்பேட்டை நெல் அரிசி உற்பத்தியாளர்கள் (சங்க மாவட்ட கூட்டம்) ▶️மாலை 5 மணி அனைத்து மணிகள் சங்க கூட்டமைப்பு பேரவை கூட்டம் (சீலநாயக்கன்பட்டி)
பெரம்பலூர் நெடுவாசல் பிரிவு சாலை அருகே மினி பஸ் மீது கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியதில் பஸ்சின் முன்பக்கம் சேதமடைந்து 4 பயணிகள் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் மார்ச் 31 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதற்காக குமரி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது தாம்பரத்தில் இருந்து மார்ச் 28 மாலை 6 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு குமரி சென்றடையும். மார்ச் 31 அன்று இரவு 8.30 மணிக்கு குமரியில் புறப்பட்டு, மறுநாள் காலை 8.55 க்கு தாம்பரத்தில் வந்தடையும். இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
கொலவை ஏரி செங்கல்பட்டு மாவட்ட நகரில் அமைந்துள்ளது. இது இம்மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். மதுராந்தகம் ஏரி முதலிடத்தில் இருக்கிறது. இந்த ஏரியானது செங்கல்பட்டு இரயில் நிலையத்தின் அருகிலேயே உள்ளது. இந்த ஏரியில் மீசைக் கடற்பறவை, இந்திய புள்ளி-பில் வாத்துகள், மூர்ஹென்கள், கூட்ஸ் போன்ற புலம்பெயர்ந்த பறவைகள் உள்ளன. தற்பொழுது ஏரியின் ஆக்கிரமிப்பால் தண்ணீர் குறைந்து வருகிறது. ஷேர் பண்ணுங்க.
ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்புக்காளை 75, வயது மூப்பால் அடிக்கடி மருத்துவ சிகிச்சை பெற்றார்.உடல் வலி அதிகமானதால் மனம் வெறுத்த முதியவர் வீட்டில் இருந்த மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொண்டு மயங்கினார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில் பலன் இன்றி இறந்தார். மகன் சுருளிமுத்து புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் வரும் 30ஆம் தேதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ‘என் கல்லூரி கனவு’ என்ற தலைப்பின் கீழ் வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே, இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். இதனை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு SHARE பண்ணுங்க..
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்ப்புரம் பகுதியில் சட்டவிரோதமாக மது மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் போலீசார் அண்மையில் அங்கு சென்று சோதனை நடத்தியபோது, பிரபல குட்கா வியாபாரி சொர்ணாக்காவை கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர். சோதனையில் சிக்கிய மது மற்றும் குட்கா பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதி நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இன்று மாலையில் ஏராளமானோர் கடற்கரைக்கு வரும் நிலையில், பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் காவல்துறை அறிவுறுத்தல்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகநாதன்(27) என்பவர் மீது ஏற்கனவே 20 குற்ற வழக்குகள் உள்ள நிலையில், கடந்த மாதம் 14-ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தா(68) என்பவருடைய வீட்டில் 48 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை திருடி சென்றதாக சண்முகநாதன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது சண்முகநாதன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது
திருத்தணி – அரக்கோணம் நெடுஞ்சாலையில் இருந்து புறவழி நெடுஞ்சாலை செல்லும் சாலையோரம், லாரி ஒன்று நேற்று (மார்.22) நின்று கொண்டிருந்தது. அப்போது, அரக்கோணத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற லாரி, நின்று கொண்டு இருந்த லாரியின் மீது பலமாக மோதியது. இதில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் கந்தன் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை பத்திரமாக மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
Sorry, no posts matched your criteria.