Tamilnadu

News March 22, 2025

மதுரையில் கட்டாயம் பார்க்க வேண்டிய கோவில்கள்

image

மதுரையில் பலருக்கும் தெரிந்த மீனாட்சியம்மன் கோவில் தவிர கட்டாயம் பார்க்க வேண்டிய கோவில்கள் பல உள்ளன.இம்மையிலும் நன்மை தருவார் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில் ,கள்ளழகர் கோயில், சோலைமலை முருகன் கோயில்,ராக்காயி அம்மன் கோயில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று வழிபட்டால் மனம் அமைதி பெரும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News March 22, 2025

புதுகை: அனைத்துக் கட்சியினருடன் SP ஆட்சியர் ஆலோசனை

image

மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக கூட கூடிய இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்துவது சம்பந்தமாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் ஆட்சியரகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர் இன்று மாலை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் அதிமுக, திமுக மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

News March 22, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்( 22.3.2025 ) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News March 22, 2025

தேனியில் யாருக்கும் தெரியாத சுற்றுலாத்தளம்

image

தேனி மாவட்டத்தில் பலருக்கும் தெரியாத ஒரு சில சுற்றுலா இடங்கள் உள்ளன. அதில் ஒரு இடம் தான் லோயர் கேம்ப் அருகே உள்ள வைரவனாறு பகுதி. இங்கு செல்லும் முல்லைப் பெரியாறு தண்ணீர் அதிக கனத்துடன் வெளியேறும் . தண்ணீர் குறுகிய பாலத்தில் மோதி வெளியேறும் போது பார்ப்பதற்கு அழகாக தோன்றும். இயற்கை சூழலுடன் முக்கோண வடிவ தடுப்பணியில் தண்ணீர் செல்வது பலரையும் கவரும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News March 22, 2025

காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று மார்ச் 22 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது இதில் பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்

News March 22, 2025

காஞ்சி சஞ்சீவராயர் கோயில்

image

காஞ்சிபுரம், ஐயங்கார்குளம் என்ற ஊரில் அமைந்துள்ளது சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் திருக்கோயில். சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துக் கொண்டு ஆஞ்சநேயர் பறக்கும்போது மலையை ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாற்றியபோது மலையிலிருந்து ஒரு சிறு பாகம் கீழே விழ, அந்த இடத்தில் கோயில் உருவானதாம். இங்கு வழிபட்டுச் சென்றால் கைவிட்டு போன பொருள் திரும்பக் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News March 22, 2025

வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள விவசாயி அய்யாகண்ணு

image

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஐயா கண்ணு தலைமையில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இந்நிலையில் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர், அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். காவல்துறையினர் பாதுகாப்பில் ஐயா கண்ணு வீட்டு காவலில் உள்ளார்.

News March 22, 2025

குழந்தை பாக்கியம் அருளும் அம்மன் 

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள  பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ எல்லையம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோவிலாகும். குழந்தை பாக்கியம் வேண்டி கோவிலில் உள்ள மரத்தில்  தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் எல்லையம்மனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் பலர் வழிபடுவர். ஷேர் பண்ணுங்க

News March 22, 2025

குழந்தை வரம் தரும் ஆலயம்

image

கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் அபய ஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தனி சன்னதியில் 6அடி உயர திருமேனியுடன் அபய ஹஸ்த ஆஞ்சநேயர் மிக கம்பீரமாக எழுந்தருளி இருக்கிறார். திருப்பாதங்கள் பக்தர்களை நோக்கி ஆசி வழங்குவது போல் உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள குளத்தின் படியில் படிப்பாயாசம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம். *மற்றவர்களுக்கு பகிருங்கள்*

News March 22, 2025

இராமநாதபுரத்தின் பெயர் காரணம் தெரியுமா?

image

இராமாயணத்தில் ராமன் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்றபோது, இதை ஒரு முக்கிய இடமாகப் பயன்படுத்தியதாகக் கருதப்படுவது ஒரு காரணமாகும். மேலும் இது முகவை என்றும் அழைக்கப்படுகிறது. வைகையின் முகத்துவாரத்தில் அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது. மேலும் முகவை என்றால் அள்ளுதல் என்றும் பொருள். இந்தப் பகுதி நெல் விளையும் பூமியாக இருந்ததால் கதிரடித்து நெல் அள்ளும் இடம் என்றும் பொருள்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

error: Content is protected !!