Tamilnadu

News March 22, 2025

காவலர் முரளி ராஜா புதுகை எஸ்.பி.யிடம் மனு

image

வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர் முரளிராஜா கடந்த ஜனவரி 20ஆம் தேதி முதல் பணிக்கு வராத காரணத்தால் அவரை விட்டோடி என்று மாவட்ட காவல்துறை அறிவித்தது. இந்நிலையில் காவலர் முரளிராஜா புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து தனது விளக்கத்தினை அளித்ததோடு தன்னை மீண்டும் பணியில் சேர்த்து பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென்று மனு அளித்துள்ளார்.

News March 22, 2025

நெல்லை: இரவு ரோந்து  பணி அதிகாரிகள் விவரம் 

image

நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்துப்பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்களை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரதாபன், திருநெல்வேலி ஊரகம் ஆய்வாளர் வேல்கனி, நாங்குநேரி ஆய்வாளர் கண்ணன், வள்ளியூர் ஆய்வாளர் ராஜாராம், சேரன்மாதேவி ஆய்வாளர் ஜெயசீலன், அம்பை ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோரை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 22, 2025

ஒரே விமானத்தில் வந்த அமைச்சர் – எம்.பி

image

சென்னை – திருச்சிக்கு புத்தம் புதிய போயிங் (Boeing) ரக பெரிய விமானத்தை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கியது. இன்று துவங்கிய முதல் விமானத்தில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திருச்சி எம்.பி துரை வைகோ இருவரும் சென்னையிலிருந்து திருச்சி வந்தனர். இன்று முதல் திருச்சியிலிருந்து கோவா, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி பெருநகரங்களுக்கு விமான சேவை துவங்கியது.

News March 22, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (22.03.2025) இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 22, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (22.03.025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News March 22, 2025

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்

image

ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது மார்ச் 30ம் தேதி இரவு 11.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக, மறுநாள் காலை 8 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. அதேபோல் மார்ச் 31-ம் தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்றடைகிறது.

News March 22, 2025

இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

உடையார்பாளையம் கச்சிபெருமாள் கிராமத்தை சேர்ந்த வசந்தா வீட்டில் (48) சவரன் நகை ஒரு லட்சம் பணம் ஒரு கிலோ வெள்ளி ஆகியவை கொள்ளையடித்தது குறித்து கடந்த 18ம் தேதி உடைய பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகங்கை மாவட்டம் கீழ் குளத்தை சேர்ந்த சண்முகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி பரிந்துரையின் பேரில் ஆட்சியர் உத்தரவிட்டார்.

News March 22, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகளை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (22/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – யுவராஜ் (9498177803), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தீபா (9443656999) ,வேலூர் – இராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News March 22, 2025

சேலம்-காரைக்கால் ரயிலை நாமக்கல் வழியாக இயக்க வேண்டும்

image

நாடாளுமன்ற மக்களவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் பங்கேற்று பேசிய நாமக்கல் எம்.பி மாதேஸ்வரன், “சேலம்-கரூர், கரூர்-திருச்சி, திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயிலை இணைத்து சேலம்-காரைக்கால் தினசரி ரயிலாக இயக்க வேண்டும். சங்ககிரி ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தில் சேர்த்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

News March 22, 2025

திண்டுக்கல் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 22.03.2025-ம் தேதி இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு நேராந்து பணியை நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!