India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 2025 பிப்ரவரி மாதத்திற்கான கலந்தாய்வு கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகர காவல் துணை ஆணையர் சிபின் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி மாநகர காவல் ஆணையர் காமினி பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.
இன்று (மார்ச்.22) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை: உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து திமுக தலைமை அறிவிப்பின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொது இடங்கள் தேசிய, மாநில, மாவட்ட நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள திமுக கொடி கம்பங்களை அகற்றி 31.3.25க்குள் அது பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும் என திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட, ஒன்றிய நகர பேரூர் மற்றும் வார்டு நிர்வாகிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை.
தென்காசி மாவட்டத்திற்கு தினந்தோறும் காவல் துறை கண்காணிப்பாளர் அதிகாரிகள் சார்பில் இன்று (22.03.25)இரவு நேர ரோந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன மேலும் உங்களது தேவையான உதவிகள் மற்றும் குறைகளை மேற்கண்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் அல்லது 98840 42100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் நாளை (23-03-2025) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், தற்பொழுது தவிர்க்க இயலாத காரணங்களால், இந்த சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர் முரளிராஜா கடந்த ஜனவரி 20ஆம் தேதி முதல் பணிக்கு வராத காரணத்தால் அவரை விட்டோடி என்று மாவட்ட காவல்துறை அறிவித்தது. இந்நிலையில் காவலர் முரளிராஜா புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து தனது விளக்கத்தினை அளித்ததோடு தன்னை மீண்டும் பணியில் சேர்த்து பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென்று மனு அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்துப்பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்களை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரதாபன், திருநெல்வேலி ஊரகம் ஆய்வாளர் வேல்கனி, நாங்குநேரி ஆய்வாளர் கண்ணன், வள்ளியூர் ஆய்வாளர் ராஜாராம், சேரன்மாதேவி ஆய்வாளர் ஜெயசீலன், அம்பை ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோரை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை – திருச்சிக்கு புத்தம் புதிய போயிங் (Boeing) ரக பெரிய விமானத்தை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கியது. இன்று துவங்கிய முதல் விமானத்தில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திருச்சி எம்.பி துரை வைகோ இருவரும் சென்னையிலிருந்து திருச்சி வந்தனர். இன்று முதல் திருச்சியிலிருந்து கோவா, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி பெருநகரங்களுக்கு விமான சேவை துவங்கியது.
கோவை மாவட்டத்தில் இன்று (22.03.2025) இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.