Tamilnadu

News March 22, 2025

வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள விவசாயி அய்யாகண்ணு

image

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஐயா கண்ணு தலைமையில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இந்நிலையில் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர், அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். காவல்துறையினர் பாதுகாப்பில் ஐயா கண்ணு வீட்டு காவலில் உள்ளார்.

News March 22, 2025

குழந்தை பாக்கியம் அருளும் அம்மன் 

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள  பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ எல்லையம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோவிலாகும். குழந்தை பாக்கியம் வேண்டி கோவிலில் உள்ள மரத்தில்  தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் எல்லையம்மனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் பலர் வழிபடுவர். ஷேர் பண்ணுங்க

News March 22, 2025

குழந்தை வரம் தரும் ஆலயம்

image

கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் அபய ஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தனி சன்னதியில் 6அடி உயர திருமேனியுடன் அபய ஹஸ்த ஆஞ்சநேயர் மிக கம்பீரமாக எழுந்தருளி இருக்கிறார். திருப்பாதங்கள் பக்தர்களை நோக்கி ஆசி வழங்குவது போல் உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள குளத்தின் படியில் படிப்பாயாசம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம். *மற்றவர்களுக்கு பகிருங்கள்*

News March 22, 2025

இராமநாதபுரத்தின் பெயர் காரணம் தெரியுமா?

image

இராமாயணத்தில் ராமன் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்றபோது, இதை ஒரு முக்கிய இடமாகப் பயன்படுத்தியதாகக் கருதப்படுவது ஒரு காரணமாகும். மேலும் இது முகவை என்றும் அழைக்கப்படுகிறது. வைகையின் முகத்துவாரத்தில் அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது. மேலும் முகவை என்றால் அள்ளுதல் என்றும் பொருள். இந்தப் பகுதி நெல் விளையும் பூமியாக இருந்ததால் கதிரடித்து நெல் அள்ளும் இடம் என்றும் பொருள்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

News March 22, 2025

திருமணத்தடை நீங்கும் ஆலயம்

image

நெல்லை, அம்பாசமுத்திரத்தில் அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு நின்ற கோலத்தில் வலது கையில் ருத்ராட்ச மாலையுடன் அகத்தீஸ்வரர் சின்ன முத்திரை காட்டியபடி இருக்கிறார். இங்கு சிவனுக்குரிய முறையில் பூஜை நடக்கிறது. சிவராத்திரி அன்று 4 கால பூஜை நடக்கிறது. இந்த ஆலயத்தில் வேண்டினால் திருமணத்தடையும், செயல்களில் வெற்றியும் கிடைக்கும் என பக்தர்கள் கருதுகின்றனர். *மற்றவர்களுக்கு பகிரவும்*

News March 22, 2025

மதுரை: குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பெண் சிசு

image

மதுரை மாநகர் மஹபூப்பாளையம் பகுதி கோவில் பிள்ளை காலனி எதிரே குப்பைத்தொட்டி அருகில் 6 மாத பெண் சிசு இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர்  காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் விரைந்து வந்து  ஆம்புலன்ஸில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 6மாத இறந்த பெண் சிசுவை எடுத்துச் சென்று விசாரிக்கின்றனர்.

News March 22, 2025

பெரம்பலூர்: மாவட்டத்தில் 10. அரசு மகளிர் விடுதிகளுக்கு குடிநீர்

image

பெரம்பலூர்: (22.03.2025)மாவட்டத்தில் 10. அரசு மகளிர் விடுதிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு மிஷின், கலெக்டர் வழங்கினார்பெரம்பலூர்: மாவட்டத்தில் 10. அரசு மகளிர் விடுதிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு மிஷின், கலெக்டர் வழங்கினார்பெரம்பலூர்: மாவட்டத்தில் 10. அரசு மகளிர் விடுதிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு மிஷின், கலெக்டர் வழங்கினார்

News March 22, 2025

ரயில் பயணிகளை ஈர்க்கும் கடம்பூர் போளி; தெரிஞ்சிக்கோங்க

image

கடம்பூர் வழியாக ரயிலில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் கடம்பூர் வந்ததும் தலையை எட்டிப் பார்ப்பார்கள். காரணம் வேறொன்றுமில்லை, மிகவும் சுவையான கடம்பூர் போளியை வாங்குவதற்காக தான். சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் இந்த போளியை, கடம்பூரைச் சேர்ந்த ராம சுப்பையர், கிருஷ்ண ஐயர் 1960 இல் அறிமுகப்படுத்தியதாக கூறுகிறார்கள். நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்களா? *புது தகவல்னா ஷேர் பண்ணுங்க*

News March 22, 2025

மாணவர்களுக்கு அழைப்பு

image

தாட்கோ மற்றும் சென்னை பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் இதர வகுப்பின் மாணவர்கள், அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி பெற பிளஸ் 2 பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்குப் பாடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்த மாணவா்கள் 65 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு எழுதலாம்.

News March 22, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து சாலை விபத்துக்கள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து காவல்துறை, நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை, மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும். மேலும் சாலை விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் புதிய வழிமுறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!