India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உடையார்பாளையம் கச்சிபெருமாள் கிராமத்தை சேர்ந்த வசந்தா வீட்டில் (48) சவரன் நகை ஒரு லட்சம் பணம் ஒரு கிலோ வெள்ளி ஆகியவை கொள்ளையடித்தது குறித்து கடந்த 18ம் தேதி உடைய பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகங்கை மாவட்டம் கீழ் குளத்தை சேர்ந்த சண்முகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி பரிந்துரையின் பேரில் ஆட்சியர் உத்தரவிட்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகளை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (22/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – யுவராஜ் (9498177803), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தீபா (9443656999) ,வேலூர் – இராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் பங்கேற்று பேசிய நாமக்கல் எம்.பி மாதேஸ்வரன், “சேலம்-கரூர், கரூர்-திருச்சி, திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயிலை இணைத்து சேலம்-காரைக்கால் தினசரி ரயிலாக இயக்க வேண்டும். சங்ககிரி ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தில் சேர்த்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 22.03.2025-ம் தேதி இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு நேராந்து பணியை நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மதுரையில் பலருக்கும் தெரிந்த மீனாட்சியம்மன் கோவில் தவிர கட்டாயம் பார்க்க வேண்டிய கோவில்கள் பல உள்ளன.இம்மையிலும் நன்மை தருவார் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில் ,கள்ளழகர் கோயில், சோலைமலை முருகன் கோயில்,ராக்காயி அம்மன் கோயில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று வழிபட்டால் மனம் அமைதி பெரும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக கூட கூடிய இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்துவது சம்பந்தமாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் ஆட்சியரகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர் இன்று மாலை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் அதிமுக, திமுக மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்( 22.3.2025 ) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் பலருக்கும் தெரியாத ஒரு சில சுற்றுலா இடங்கள் உள்ளன. அதில் ஒரு இடம் தான் லோயர் கேம்ப் அருகே உள்ள வைரவனாறு பகுதி. இங்கு செல்லும் முல்லைப் பெரியாறு தண்ணீர் அதிக கனத்துடன் வெளியேறும் . தண்ணீர் குறுகிய பாலத்தில் மோதி வெளியேறும் போது பார்ப்பதற்கு அழகாக தோன்றும். இயற்கை சூழலுடன் முக்கோண வடிவ தடுப்பணியில் தண்ணீர் செல்வது பலரையும் கவரும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று மார்ச் 22 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது இதில் பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்
காஞ்சிபுரம், ஐயங்கார்குளம் என்ற ஊரில் அமைந்துள்ளது சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் திருக்கோயில். சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துக் கொண்டு ஆஞ்சநேயர் பறக்கும்போது மலையை ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாற்றியபோது மலையிலிருந்து ஒரு சிறு பாகம் கீழே விழ, அந்த இடத்தில் கோயில் உருவானதாம். இங்கு வழிபட்டுச் சென்றால் கைவிட்டு போன பொருள் திரும்பக் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.