Tamilnadu

News March 22, 2025

ஆஞ்சநேயர் கிரிவலம் செல்லும் அதிசய மலைக்கோவில்

image

கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் உள்ள புதுப்பாக்கத்தில் கஜகிரி என்ற மலை மீது வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வழிபட்டால் நோய்கள், மன அழுத்தம், திருமண தடைகள் நீங்கும். பவுர்ணமி தோறும் இங்கு ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாக நம்பிக்கை. அந்த சமயத்தில் நாமும் கிரிவலம் வந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 22, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தின் கைவினை பொருட்கள்

image

ராணிப்பேட்டையில் சுமார் 400 ஆண்டுகள் முன்பு ஆற்காடு நவாப்களின் தேவைக்காக பிரம்பின் மூலம் அறைகலன்கள் (நாற்காலி,மேசை) மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு வாலாஜா பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. சில குடும்பங்கள் மட்டும் ஈடுபட்ட இந்த தயாரிப்பில் தற்பொழுது பலரும் பயிற்ச்சி பெற்று ஈடுபட்டு வருகின்றனர். கதர் வாரியத்தின் கீழ் பதிவு பெற்ற சங்கத்தின் மூலமாக இந்த தொழில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

News March 22, 2025

ஆஞ்சநேயர் கிரிவலம் செல்லும் அதிசய மலைக்கோவில்

image

கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் உள்ள புதுப்பாக்கத்தில் கஜகிரி என்ற மலை மீது வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வழிபட்டால் நோய்கள், மன அழுத்தம், திருமண தடைகள் நீங்கும். பவுர்ணமி தோறும் இங்கு ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாக நம்பிக்கை. அந்த சமயத்தில் நாமும் கிரிவலம் வந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க

News March 22, 2025

மதுரையில் கட்டாயம் பார்க்க வேண்டிய கோவில்கள்

image

மதுரையில் பலருக்கும் தெரிந்த மீனாட்சியம்மன் கோவில் தவிர கட்டாயம் பார்க்க வேண்டிய கோவில்கள் பல உள்ளன.இம்மையிலும் நன்மை தருவார் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில் ,கள்ளழகர் கோயில், சோலைமலை முருகன் கோயில்,ராக்காயி அம்மன் கோயில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று வழிபட்டால் மனம் அமைதி பெரும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News March 22, 2025

திண்டிவனம் அருகே ஆடுகள் கடத்திய கும்பல் கைது

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பாங்கொளத்தூரில் விவசாயியின் 5 ஆடுகளை காரில் கடத்த முயன்ற கும்பலை பொதுமக்கள் மடக்கினர். போலீசார் விசாரணையில் 5 பேர் கைது செய்யப்பட்டு, 7 ஆடுகள், 2 சொகுசு கார்கள், ₹60,000 பணம், தங்க மோதிரங்கள், ₹2.13 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், குற்றவாளிகள் பல்வேறு மாவட்டங்களில் திருட்டில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

News March 22, 2025

JUST IN: செங்கல்பட்டு ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிப்பு

image

செங்கல்பட்டு ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கிராம உதவியாளராக பணியாற்றிய முனுசாமி 2001இல் மரணமடைந்தார். அவரின் மகன் ராஜாகிளிக்கு கருனை அடிப்படையில் 3 மாதங்களுக்குள் வேலை வழங்க 2023ல் ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி அவர் தொடர்ந்த வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு நேட்டீஸ் அனுப்பியும் ஆஜராகததால் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

News March 22, 2025

முன்னாள் அமைச்சர் மீது வழக்கு ரத்து – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

image

2018 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆ. ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை அவர் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி ஜி. கே. இளந்திரையன் வழக்கை விசாரணை நடத்தி, அரசியல் காரணமாக வழக்கு தொடரப்பட்டது என்று கருதி, அதை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

News March 22, 2025

இலவசமாக தக்காளி வழங்கிய விவசாயி

image

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில், தக்காளி விலை கடும் சரிவால் நஷ்டம் அடைந்த விவசாயி ஒருவர் இலவசமாக தக்காளிகளை மக்களுக்கு வழங்கினார். 2 லட்சம் ரூபாய் செலவில் விளைவித்த தக்காளிக்கு வெறும் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். விவசாயிகள் பெரும் நஷ்டம் அடையாமல் இருக்க, அரசே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 22, 2025

அரும்பாவூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரும்பாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

News March 22, 2025

குமரியில் 17 புதிய பேருந்துகள் தொடக்கம்

image

குமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் இன்று 17 புதிய பேருந்துகள் வழி தடத்தை மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் மனோ தங்கராஜ், ஜே.ஜி பிரின்ஸ், தாரகை கத்பர்ட், துணை மேயர், மண்டலத்தலைவர் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.*பஸ் பயணிகளுக்கு பகிரவும்*

error: Content is protected !!