Tamilnadu

News April 23, 2025

வேலூர் காவல் துறை சார்பில் செய்தி குறிப்பு

image

வேலூர் காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உங்கள் பகுதியில் விற்கப்படும் சட்டவிரோத போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து, உங்களின் சுய விபரங்களை வெளிப்படுத்தாமல் புகாரளிக்க, Drug Free Tamil Nadu தமிழ்நாடு அரசால் அறிமுகம் செய்யப்பட்ட செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 23, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி 

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர்  காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று  இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

News April 23, 2025

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.23) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News April 23, 2025

6முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை 

image

தமிழ்நாட்டில் 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 24) கடைசி தேர்வு முடிந்ததும், நாளை மறுநாள் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. இதைத்தொடர்ந்து அரசு பள்ளி, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் கோடை விடுமுறைகள் முடிந்து வரும் ஜூன் 2ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

News April 23, 2025

இராணிப்பேட்டை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை (23.04.2025) இன்று இரவு பாதுகாப்பு பணிக்கான ரவுண்டு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களில் பொறுப்பான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறை மற்றும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாகும். அவசர தேவைக்காக இவை பயனுள்ளதாக இருக்கும்.

News April 23, 2025

9 பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு இடைத்தேர்தல்

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களுக்கான இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகள் துவங்கி உள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 9 பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்டமாக சரிபார்க்கும் பணி நடைபெற்றதை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News April 23, 2025

மிளகாய்க்கான மதிப்பு சங்கிலி பங்குதாரர் ஆலோசனை கூட்டம்

image

ராமநாதபுரத்தில் மிளகாய்க்கான மதிப்பு சங்கிலி பங்குதாரர் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. வேளாண் வணிக இணை இயக்குநர் அமுதன் தலைமை வகித்தார். வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழக முதுநிலை மேலாளர்கள் பாண்டித்துரை, கவிமுகில், வேளாண் இணை, துணை இயக்குநர்கள் பாஸ்கரமணியன், கோபாலகிருஷ்ணன், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகதீசன், வள்ளல் கண்ணன் உட்பட பலர் ஆலோசனை வழங்கினர்.

News April 23, 2025

போலீஸ் S.I தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. பட்டப்படிப்பு தகுதி உடையவர்கள் https://rb.gy/tns1hq என்ற இணையதளத்தில் பதிவு செய்து, இலவச பாடக்குறிப்புகள் பெற்றுப் பயன் பெறலாம் என கலெக்டர் தினேஷ் குமார் தெரிவித்தார்.

News April 23, 2025

கேரளாவில் நடைபெற்ற கூட்டத்தில் இராமநாதபுரம் எம்பி

image

வெளியுறவுத்துறை நாடாளுமன்ற நிலைக்குழு சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக கேரளா மாநிலத்தில் நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது கொச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் RPO மற்றும் பாஸ்போர்ட் சேவை மையம் PSK உள்ளிட்டவைகளை நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பார்வையிட்டனர். இதில், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் நவாஸ்கனி கலந்து கொண்டார்.

News April 23, 2025

காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல். 23) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!