India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து சாலை விபத்துக்கள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து காவல்துறை, நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை, மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும். மேலும் சாலை விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் புதிய வழிமுறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வத்திராயிருப்பு அருகே இலந்தைக்குளத்தில் பெண்கள் வெள்ளையுடை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.பொம்மியம்மாள் என்ற பெண்,”என்னை நினைத்து வெள்ளையுடை அணிந்தால் நான் உங்களை காப்பேன்” என கூறியதால் பெண்கள் வெள்ளையுடை அணிந்து வருகின்றனர்.வெளியூரில் இருந்து திருமணமாகி வரும் பெண்களும் இதை பின்பற்றி வரும் நிலையில்,இங்கிருந்து வெளியூர் திருமணமாகி செல்லும் பெண்கள் வெள்ளை ஆடை அணிவதில்லை. புதுத்தகவல்னா ஷேர் பண்ணுங்க
அரியலூரில் மார்ச் 20 முதல் 29 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். இந்தக் கண்காட்சியை மாவட்ட நிர்வாகம், தமிழ் பண்பாட்டுப் பேரமைப்பு, பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்குநரகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்கிறது. அரியலூரில் உள்ள வாலாஜாபாத்தில் உள்ள அன்னலட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும் ஏதேனும் விபத்துக்கள் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும் இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதன்படி மார்ச் மாதம் 22ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை அருகே ஜடேரி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இந்த ஜடேரி நாமகட்டி நீர் சார்ந்த சிலிக்கேட் தாதுக்களின் வளமான படிவிலிருந்து, களிமண் பதப்படுத்தப்பட்டு விரல் போன்ற குச்சிகளாக வடிவமைக்கப்படுகிறனர். ஜடேரி நாமகட்டி சிலைகள், மனிதர்கள் மற்றும் கோயில் யானைகளின் நெற்றிகளை அலங்கரிக்கப் பயன்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ரசாயன ஊசி செலுத்தி விற்பனை செய்யப்பட்ட 6 டன் தர்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர். ரசாயனம் கலந்த பழங்களை சாப்பிடுவது புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலக்கேடுகளை ஏற்படுத்தும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தர்பூசணியில் ரசாயனம் கலந்துள்ளதா என்பதை மக்கள் கவனமாக சரிபார்த்து வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அதிகமான விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிரிடுகின்றனர். அதில், இந்த ஆண்டு உருளைக்கிழங்கு விலை விவாசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துளாளது. அதன்படி இன்றைய விலை நிலவரமாக உருளைகிழங்கின் அதிகபட்ச விலையாக ரூ.1380 – ரூ.840 ஆகவும், பொடி கிழங்கிற்கு ரூ.580 – ரூ.590 விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலமாக விற்கப்படுகிது
தேனி மாவட்டதில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக
தேனி உட்பட 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளான குமுளி, கம்பம் மெட்டு,போடி மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள, பாண்டியன் குப்பம் கிராம ஊராட்சி மன்ற தலைவரின் மகன், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அறிந்த சின்னசேலம் போலீசார்,வழக்கு பதிவு செய்து.தற்போது, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.