India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது கடந்த 2 நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி இருந்து விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உப்பு வயல்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 22) 28.74அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.90அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.72 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 61 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 27 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
தடுப்பு மருந்து துறையின் கீழ் 6 மாதம் முதல் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு தலைமை மருத்துவமனைகளில் இன்று மாலை 5 மணிக்குள் அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவத்தை வழங்கிட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மதுக்கரை அரிசி பாளையத்தை சேர்ந்தவர் பத்மா(53). சில தினங்களுக்கு முன் இவர் அப்பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசாரின் விசாரணையில், மகளுக்கு திருமணம் தாமதமாகி வந்தது, மகனின் எதிர்காலம் குறித்த கவலை, எதிர்பாராதவிதமாக குடும்பத்தில் ஏற்பட்ட பணச் செலவுகள் போன்ற வற்றால் மன அழுத்தத்தில் இருந்த பத்மா, மேற்கண்ட விபரீத முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
#காலை 10.30 மணிக்கு திருவட்டார் – திருவரம்பு சாலைப் பணியை தொடங்கி வைக்கிறார்.#11.15 மணிக்கு குலசேகரம் – அரசமூடு விளையாட்டு மைதான பணிகளை ஆய்வு செய்கிறார்.#மதியம் 12.15 மணிக்கு பேச்சிப்பாறை – கோதையாறு சாலை சீரமைப்புப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.#மாலை 6 மணிக்கு கீழ்குளம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
உலக தண்ணீர் தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் மார்.29 அன்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மார்ச் 22இல் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருப்பூர் வடக்கு மாவட்டம் முழுவதும் வீடுதோறும் கருப்புக்கொடி கட்டி போராட்டம் சற்றுமுன் தொடங்கியது. திருப்பூர் பாஜக மாவட்ட தலைவர் KCMB சீனிவாசன் அவர் இல்லத்தில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தை தொடங்கி வைத்தார். உடன் தொண்டர்கள் பலர் இருந்தனர்.
பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை இன்றைய தினம் தமிழகமெங்கும் திமுக அரசைக் கண்டித்து அனைத்து நிர்வாகிகளும் கருப்புக்கொடி கட்டி போராட வேண்டும் என்று கூறினார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று பாஜகவினர் கருப்பு நிற உடை அணிந்து தங்களது இல்லத்தில் கருப்பு கொடியை கட்டி தங்களது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதில் உதகையை சேர்ந்த பாஜக நிர்வாகி விஜயலட்சுமி வீட்டில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றுவருகிறது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின்படி பல்வேறு பகுதிகளில் திமுக அரசை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் சரவணனின் இல்லம் முன்பாக நிர்வாகிகளுடன் கருப்புக்கொடி ஏந்தி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் பலருடன் இருந்தனர்.
13 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை செய்த சூரக்கோட்டை பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்ற முதியவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இந்நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். இதனையடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.