India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்கும் வகையில் திருச்சி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறையை ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் பற்றி புகார் தெரிவிக்க எந்த நேரத்திலும் அழைக்கவும். பெண்களுக்கான உதவி எண்கள் 181 மற்றும் 1091 அழைக்க கூறியுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு இசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் மார்ச்.26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் இன்று ராமநாதபுரத்தில் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு இசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் மார்ச்.26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம காவல்துறை சார்பில்
காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில்
மயிலாடுதுறை காவல்துறையினர்,
மயிலாடுதுறை நகரில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அணிவகுப்பு நடத்தினர்.
மயிலாடுதுறை காவல் நிலையத்தை சேர்ந்த அனைத்து அதிகாரிகளும் காவலர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு மயிலாடுதுறை மக்களிடையே பாராட்டை பெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காதல் ஜோடி, கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்புக் கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை காணவில்லை என்று பெற்றோர் புகார் அளித்ததாக கூறி, அவர்களை காஞ்சிபுரம் போலீசார் அழைத்துச் சென்றனர். காஞ்சிபுரத்தில் உயிருக்கு பாதுகாப்பில்லை என்பதால் அங்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று கூறி காதல் ஜோடி போலீசாரிடம் கதறி அழுதனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நெல்லை மாவட்டத்தில் பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் சிறுகுறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் 49,481 பி எம் கிஷான் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை சுமார் 22,000 பேர் பி எம் கிஷான் மற்றும் இதர விவசாயிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் கூட்டுறவு மேலாண்மை நிலையம் சார்பில் மார்ச் 24 முதல் ஏப்.13ஆம் தேதி வரை நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் தகுதியானவர்கள் விண்ணப்பங்களை நேரடியாக அளிக்கலாம். பயிற்சியில் சேர விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில் மட்டுமே பயிற்சி வகுப்பு நடைபெறும். பயிற்சி ஏப்.15இல் தொடங்கும்.
சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த நடராஜன், இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2025 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். மார்ச் 24 ஆம் தேதி லக்னோ அணிக்காக நடைபெறும் போட்டியில் நடராஜன் பங்கேற்கவுள்ளார். இந்த போட்டியில் நடராஜன் சிறப்பாக விளையாட வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் உள்ள 274 ஊராட்சிகளில், வரும் 22ஆம் தேதி ‘உலக தண்ணீர்’ தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால், நிர்வாக காரணங்களால் 23ஆம் தேதிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அது மீண்டும் மாற்றப்பட்டு வரும் 29ஆம் தேதி அன்று கிராம சபை கூட்டம் நடைபெறும் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில் சங்கமம் நம்ம ஊரு திருவிழாவிற்கான கலை குழுக்கள் நையாண்டி மேளம் கரகாட்டம் காவடி ஆட்டம் காளையாட்டம் கை சிலம்பாட்டம் பம்பை மயிலாட்டம் பறையாட்டம் கிராமிய பாட்டு பல்சுவை நிகழ்ச்சி வழங்கும் கலை குழுக்கள் தேர்வு மார்ச் 22 இன்று 10-5 மணி செல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.