India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சுகாதார ஆய்வாளர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட 16 காலியிடங்கள் நிரப்படவுள்ளன. இதற்கு 8th, B.Sc, Diploma, ITI, MBBS, Nursing முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படும். மார்ச்.24 கடைசி நாளாகும். விண்ணபிக்க இங்கே <
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கடைசி பங்குனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவையில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேகதாது அணையை கட்ட மறுப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்து கன்னட அமைப்புக்கள் சார்பில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டது.ஓசூர் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற கன்னட அமைப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.
சேலம், டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை இங்கே <
திருச்சி டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை இங்கே <
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்,நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டத்திற்கு 190 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம்.<
ஊட்டியில் அனைத்து வணிகர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு வணிகர் பேரமைப்பின் தலைவர் முகமது பாரூக் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறுகையில், “இ-பாஸ் முறையின் கீழ் சுற்றுலா வாகனங்கள் வர கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. எனவே, இதை எதிர்த்து ஏப்ரல் 2இல் முழு கடை அடைப்பு நடைபெறும்” என்றார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த எண்டத்தூரை சேர்ந்த சிவகாமி மாமண்டூர் பகுதியில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று 21ஆம் தேதி பேருந்தில் வேலைக்கு வந்து மாமண்டூர் பகுதியில் இறங்கும்போது படியில் தவறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம். குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.
வந்தவாசி அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(45) கட்டிட மேஸ்திரி. இவர் வேலைக்கு சென்று விட்டு கிடைக்கும் கூலியை வைத்து மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதால் தினந்தோறும் மனைவியுடன் தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் போதையில் சுரேஷ் வந்துள்ளார்.அப்போது அவரது மனைவி ஹேமாவதி தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Sorry, no posts matched your criteria.