Tamilnadu

News March 22, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(மார்ச் 22) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க கேட்டு கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை முன்பு 101 வது நாளாக ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்.#காலை 10:30 மணிக்கு கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வள்ள விளை சந்திப்பில் மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News March 22, 2025

விரால் மீன்களின் இனப்பெருக்கம் உற்பத்தி குறித்து பயிற்சி

image

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விரால் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்பம் பற்றிய ஒரு நாள் வளாக வழியிலான பயிற்சி 03.04.2025 அன்று நடைபெற உள்ளது. விரால் மீனின் உயிரியல், சினைமீன் தேர்வு செய்தல், ஹார்மோன் செலுத்தும் முறைகள், உணவு மற்றும் உணவிடுதல் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப வகுப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

News March 22, 2025

சர்ப தோஷம் நீக்கும் கீழப்பெரும்பள்ளம் கேது பகவான்

image

கீழப்பெரும்பள்ளத்தில் உள்ளது நாகநாதர் கோயில். நவகிரகங்களில் ஒருவரான கேது பகவான் மனித உடலும், பாம்பு தலையும் கொண்டவர். பார்கடலை கடைய உதவிய வாசுகி பாம்பு தன் பாவம் போக்க சிவபெருமானிடம் வேண்ட, வாசுகி பக்தியை கண்டு நாகநாத சாமி எனும் பெயரில் இக்கோயிலில் மூலவராக உள்ளார். நாக தோஷம் நீங்க இவரை வழிபடுவது சிறப்பு. இவருக்கு கொள்ளு வைத்து வழிபட்டால் தீரா நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. SHARE செய்யவும்

News March 22, 2025

JOB: கோவையில் வேலை வாய்ப்பு

image

கோவை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 114 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Com, B.Sc, BA, Diploma, ITI, M.Sc, MA, MBBS, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 60,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க மார்ச்.24 கடைசி நாள் ஆகும். இதற்கு <>விண்ணப்பிங்க இங்கு கிளிக் செய்யவும்<<>>. மேலும், Share பண்ணுங்க.

News March 22, 2025

ஈரோட்டில் வேலை; ரூ.60,000 வரை சம்பளம் APPLY NOW

image

ஈரோடு, மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சுகாதார ஆய்வாளர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட 16 காலியிடங்கள் நிரப்படவுள்ளன. இதற்கு 8th, B.Sc, Diploma, ITI, MBBS, Nursing முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படும். மார்ச்.24 கடைசி நாளாகும். விண்ணபிக்க இங்கே க்ளிக் செய்யவும். இதை வேலை தேடும் உங்களுடைய நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News March 22, 2025

திருப்பத்தூரின் அடையாளம்; கமகமக்கும் ஆம்பூர் பிரியாணி

image

ஆம்பூர் பிரியாணி என்பது திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் தயாரிக்கப்படும் பிரியாணி வகை ஆகும். அசைவ உணவான இந்தப் பிரியாணியில் கோழி, ஆடு அல்லது மாட்டுக் கறி சேர்க்கப்படுகிறது. ஆம்பூர் பிரியாணியில் கைமா அரிசியை நெய்யுடன் கலப்பது இதன் தனித்தன்மைகளில் ஒன்றாகும். ஆற்காட்டை ஆண்ட ஆற்காடு நவாப் மூலம் சிறப்படைந்த இந்தப் பிரியாணி ஆம்பூருக்குத் தனிச் சிறப்புப் பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஷேர் செய்யுங்கள்

News March 22, 2025

புதுகை மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம்

image

புதுகை மாவட்டத்தில் நாளை (மார்ச்.23) 489 கிராம ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் உலக தண்ணீர் தின கருப்பொருள்களை பற்றி விவாதித்தல், ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவீனம், ஊராட்சி தணிக்கை அறிக்கை, குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார். கிராம மக்களுக்கு SHARE பண்ணுங்க.. 

News March 22, 2025

ராமநாதபுரத்தில் 429 ஊராட்சிகளில்  கிராம சபை கூட்டம்

image

உலக தண்ணீர் தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நாளை (மார்ச்.23) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் உலக தண்ணீர் தின கருப்பொருள், ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை, தூய குடிநீர் விநியோகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என ஆட்சியர்  சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News March 22, 2025

தஞ்சை டைடல் பார்க்கில் வேலை வாய்ப்பு

image

தஞ்சாவூர் டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 22, 2025

புளியங்குடி அந்தோணிசாமிக்கு ‘வேளாண் வேந்தர்’ விருது

image

புளியங்குடியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. ‘முன்னோடி இயற்கை விவசாயி’யான இவர், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். மறுதாம்பு கரும்பு சாகுபடி, எலுமிச்சை, மரப்பயிர்கள் சாகுபடியில் சிறந்து விளங்குகிறார். இவரின் இயற்கை விவசாயப் பணிகளைப் பாராட்டி சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் நேற்று(மார்ச் 22) ‘வேளாண் வேந்தர்’ விருது அளித்துள்ளது.

error: Content is protected !!