India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல்லில் இன்று 21-03-2025 இரவு 11.00 மணி முதல் நாளை சனிக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது…
பாஜகவை சேர்ந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் சிவ கோகுல கிருஷ்ணனை நேற்று அடையாளம் தெரியாத ஐந்து பேர் சேர்ந்த கும்பல் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால் படுகாயமடைந்த அவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பாஜக வை சேர்ந்த பலர் மீஞ்சூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.
சேலம் மாவட்டம் கீரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனியார் பள்ளி ஓட்டுநர் ஜெயவேல்(26) இன்று (மார்ச் 21)பள்ளி வேலை எடுத்துக்கொண்டு பணிக்கு செல்வதற்காக வேனை இயக்கிய போது தந்தையை பார்ப்பதற்காக ஒன்றரை வயது குழந்தை ரோஹித் ராஜ் வேனின் பின்புறம் வந்தது இதனை அறியாமல் வேனை பின்னோக்கி இயக்கியதில் சக்கரத்தில் நசுங்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புட்லூர் அங்காள பரமேசுவரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோவிலாகும். குழந்தை பாக்கியம் வேண்டி இக்கோவிலில் வந்த வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதை பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் பலர் அங்காள பரமேசுவரியம்மனை வழிபடுவர். ஷேர் பண்ணுங்க
சிவகங்கை மாவட்டம் அரசு பள்ளிகளில் 2025-26 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் மார்ச்.1 முதல் 20ஆம் தேதி வரை 10,316 மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 268 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 10 ஆயிரத்தை தாண்டி சிவகங்கை முதலிடத்தில் உள்ளதால் ஜூன் மாதத்தில் 1 லட்சத்தை தாண்டும் என்று பள்ளிகல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில், இன்று 21.03.2025 இரவு, 9 மணி முதல் காலை 6 மணி வரை, பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின், அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், உடுமலை, பல்லடம், அவினாசி, தாராபுரம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையினரின், இரவு ரோந்து பணி விபரம், மாவட்ட காவல் துறையினரால், வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில், பிரதமரின் இண்டன்ஷிப் திட்டத்தில், முன்னணி நிறுவனங்களில், ஊக்கத்தொகையுடன், கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 10ஆம் வகுப்பு முதல், பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு, ஓராண்டு தொழில்பயிற்சி வழங்கி, நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது. இதற்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்க வரும் 30ஆம் தேதிக்குள் <
சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த ஜான் என்கிற சாணக்கியா, நசியனூர் தேசிய நெடுஞ்சாலைகள் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய சதீஸ், சரவணன், பூபாலன் ஆகியோரை சுட்டு பிடித்த காவல்துறையினர், வெட்டு காயம்பட்ட கார்த்திகேயனையும் கைது செய்தனர். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த பார்த்திபன், அழகரசன், சேதுவாசன், சிவகுமார், பெரியசாமி ஆகிய 5 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்துஅரசு, அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள்தங்களது கல்வியை தொடர்வதற்கு ரூ.50,000/- உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம்வேளாண்மை, அரசின் ஒற்றைச் சாளர முறையில்(கவுன்சிலிங்) கல்லூரிச் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.