India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கல்வித்துறை பொது நூலக இயக்கம் சார்பில் நாளை(மார்.22) காலை 10 மணியளவில் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் மற்றும் உள்ளாட்சித் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். புத்தக பிரியர்களுக்கு இச்செய்தியை பகிருங்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகளை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (21/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – மகாலட்சுமி (7708049200) ,வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (21.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் இன்று (21.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் இருப்புப் பாதையில் புளியமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இன்று(மார்.21) மாலை திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் டெக்னிகல் பிரிவு ஊழியர்கள் அதிகாரிகள் அங்கு சென்று சிக்னல் கோளாறு சரி செய்தனர். இதனால் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரயில்கள் 30 நிமிடம் கால தாமதமாக சென்றது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற தகுதியுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள் / படைப் பணியாற்றுவோர் / சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூடத்தில் (D.D.C Hall-ல்) வருகின்ற 25.03.2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இன்று (மார்ச்.21) தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளையின் கூட்டம், நாமக்கலில் இன்று 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ 4.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டையின் நுகர்வு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.15 ஆகவே நீடிக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற உலக தண்ணீர் தினமான 22.03.2025 அன்று நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு 29.03.2025 அன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கிராம சபைக் கூட்டங்களில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.