India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் தொழில் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் PM YASASVI என்ற திட்டத்தின் கீழ் மேல் படிப்பிற்காக கல்வி உதவித் தொகை பெற https://umis.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு SHARE பண்ணுங்க..
“முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள், கைம்பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெற முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் மனுவினை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக செயலாளராக பண்ணை சொ.பாலு என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை இன்று தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார். புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள பண்ணை பாலு மயிலாடுதுறை நகர செயலாளராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதாவை, இன்று மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் வழுவூர் விஜி.கே.மணி, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நேரில் சென்று சந்தித்து ரயில் நிலையம் தொடர்பான கட்டுமான பணி உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் எழுப்பி சிறப்பாக செயல்படுவதற்காக வாழ்த்துக்கள் கூறினார்.
மக்கள் தொகை அடிப்படையிலான மறுவரையறையை எதிர்கின்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விளங்குவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் முதல்வரின் வழிகாட்டுதலின்படி இதற்கு தொடர்ந்து குரல் கொடுப்போம். நமது உரிமையைக் காப்போம் என்று தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம்,அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-9884042100 ஐ தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுளள்ளது.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 1,907 சைபர் குற்ற வழக்குகள் (இணைய வழி மோசடி) பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட எஸ்பி ராஜேஸ் கண்ணன் தெரிவித்தாா். பொதுமக்கள் பணத்தை ஆன்லைன் மூலம் இழந்தால் காவல் நிலையத்திற்கு வருவதற்கு முன்பாக 1930 எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கைப்பேசி திருட்டுகள் நடைபெற்றால் இணையத்தில் கைப்பேசி எண்ணை கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (21.03.2025) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல்,இ.ஆ.ப., விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வேளாண்மை இணை இயக்குநர் ப.சிவானந்தம், கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கந்தராஜா ஆகியோர் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.