India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை, மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளம் பகுதியை சேர்ந்த மகாராஜா என்பவர் நேற்று முன்தினம் திடீரென தனது தந்தை முருகனை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் ஸ்தலமான பண்பொழி திருமலை கோவில் ஆயக்குடி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் மாதாபுரம் அருகே உள்ள தோரணமலை, பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில், புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி, சிவகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் அக்டோபர் 27ம் தேதி சூரசம்ஹார நிகழ்வுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுமா? என மக்கள் எதிர்பார்ப்பு.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற உள்ளாட்சிகள் தினமான நவ.01 அன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார். கிராம சபைக் கூட்டங்களில் விவாதித்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். ஷேர் பண்ணுங்க

வடகிழக்கு பருவமழை தீவிரமாகும் நிலையில், செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. தினமும் 10 பேருக்கு இருந்த பாதிப்பு, தற்போது 60க்கும் மேல் பதிவாகி வருகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் பாதிப்பு, இரட்டிப்பாகும் என்பதால், பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய/மாநில அரசுகளின் போட்டித்தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்மையத்தில் புதிய பயிற்றுநர்களுக்கான நேர்காணல் நடைபெறவுள்ளது. நாமக்கல்லை சேர்ந்த திறமைமிக்க நபர்கள் அக்.30ந் தேதிக்குள் சுயவிவரக் குறிப்புகளுடன் மையத்திற்கு நேரில் அணுகுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.ஷேர் பண்ணுங்க

புதுவை வில்லியனூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்ற போது, கோபாலன் கடை பகுதியில் வாலிபர் ஒருவர் மதுபோதையில் கத்தியை காட்டி அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டுவதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று, அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கோபாலன் கடை பகுதி அருண்குமார் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து, காய்ச்சல், கடும் தலைவலி, வாந்தி, மூட்டு வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் தினமும் ஏராளமானோர் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். டெங்கு அறிகுறி, காய்ச்சல் இருந்தால் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக சென்று அணுக வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

வேப்பனஹள்ளி வட்டார வேளாண்மை அலுவலகத்தில், முருகேசன் என்பவர், உதவி வேளாண்மை அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மங்கம்மா என்பவருக்கு மாடு வாங்க மானியம் ரூ.32ஆயிரத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு ரூ.20ஆயிரம் கிடைத்த நிலையில் மீதமுள்ள 12ஆயிரத்தை விடுவிக்க முருகேசன் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து மங்கம்மா அளித்த புகாரின் பேரில் முருகேசனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

திருவண்ணாமலை, மலைப்பகுதிகளிலும், நீர் நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு விரைவாக அகற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், மலைப் பகுதிகளிலும், நீர்நிலைகளிலும் ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என நேற்று வழக்கு விசாரணையின் போது தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கரூர்மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2025ம் ஆண்டு தந்தை பெரியார் பிறந்தநாளை ஒட்டி (31.10.2025) கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/தனியார் 6 முதல் 12 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான தனித்தனியே பேச்சுப்போட்டிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04324- 255077 தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.