Tamilnadu

News March 22, 2025

திண்டுக்கல்லுக்கு கனமழை இருக்கு

image

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று(மார்ச்.22) பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க. ஷேர் பண்ணுங்க.

News March 22, 2025

சேலம்: அணைமேடு முருகன் சிலை வரிசீரமைப்பு மும்முரம்

image

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு தாரமங்கலம் அணைமேட்டில் கட்டப்பட்ட முருகன் சிலை தமிழ்நாடு மட்டுமல்லாது உலக அளவில் பேசப்பட்டதை நம் எல்லோரும் அறிந்ததே.
முருகன் சிலையின் மறுசீரமைப்பு பணி 80சதவீதம் முடிவுற்ற நிலையில் முன்பு இருந்த உடல் அமைப்பை முழுவதுமாக மாற்றி, முக அமைப்பை மாற்றியும், நெஞ்சுப் பகுதியில் சிறிய சிவன் சிலையும் முருகர் சிலையும் உள்ளது போல வடிவமைத்து உள்ளனர்.விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும்

News March 22, 2025

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் தொழில் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் PM YASASVI என்ற திட்டத்தின் கீழ் மேல் படிப்பிற்காக கல்வி உதவித் தொகை பெற https://umis.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 22, 2025

முன்னாள் படைவீரர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

image

“முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள், கைம்பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெற முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் மனுவினை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 22, 2025

தேமுதிக மாவட்ட செயலாளர் நியமனம்

image

மயிலாடுதுறை மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக செயலாளராக பண்ணை சொ.பாலு என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை இன்று தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார். புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள பண்ணை பாலு மயிலாடுதுறை நகர செயலாளராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 22, 2025

எம்பி சந்தித்த மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர்

image

மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதாவை, இன்று மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் வழுவூர் விஜி.கே.மணி, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நேரில் சென்று சந்தித்து ரயில் நிலையம் தொடர்பான கட்டுமான பணி உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் எழுப்பி சிறப்பாக செயல்படுவதற்காக வாழ்த்துக்கள் கூறினார்.

News March 22, 2025

முதலமைச்சர் இந்தியாவுக்கே வழிகாட்டும் – அன்பில் மகேஷ்

image

மக்கள் தொகை அடிப்படையிலான மறுவரையறையை எதிர்கின்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விளங்குவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் முதல்வரின் வழிகாட்டுதலின்படி இதற்கு தொடர்ந்து குரல் கொடுப்போம். நமது உரிமையைக் காப்போம் என்று தெரிவித்துள்ளார்.

News March 22, 2025

தென்காசி மாவட்ட காவலர்கள் இரவு ரோந்து பணி

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம்,அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-9884042100 ஐ தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுளள்ளது.

News March 22, 2025

சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 22, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 1,907 சைபர் குற்ற வழக்குகள் பதிவு

image

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 1,907 சைபர் குற்ற வழக்குகள் (இணைய வழி மோசடி) பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட எஸ்பி ராஜேஸ் கண்ணன் தெரிவித்தாா். பொதுமக்கள் பணத்தை ஆன்லைன் மூலம் இழந்தால் காவல் நிலையத்திற்கு வருவதற்கு முன்பாக 1930 எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கைப்பேசி திருட்டுகள் நடைபெற்றால் இணையத்தில் கைப்பேசி எண்ணை கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

error: Content is protected !!