Tamilnadu

News March 22, 2025

மினி பஸ் இயக்க அனுமதி சீட்டுக்கான செயல்முறை ஆணை வழங்குதல்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கு மினி பேருந்து வசதியை ஏற்படுத்தும் வகையில் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று போக்குவரத்து இல்லாத கிராமங்களுக்கு சிறிய பேருந்து (மினி பஸ்) இயக்க அனுமதி சீட்டுக்கான செயல்முறை ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப.ஆகாஷ் அவர்கள் நேற்று (21.3.25) வெள்ளிக்கிழமை வழங்கினார்கள்.

News March 22, 2025

டெட்டால் குடித்த இரண்டரை வயது பெண் குழந்தை கவலைக்கிடம்

image

திருப்பத்தூர் ஜோலார்பேட்டையை அடுத்த ஆசிரியர் நகர், லம்பாடி காலணியை சேர்ந்தவர் ஜாபர். இவரது இரண்டரை வயது மகள் மரியம் பாத்திமா வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த டெட்டாலை குடித்துள்ளார். இதானல் மயக்கமடைந்த சிறுமியை பெற்றோர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 22, 2025

டிராக்டர் மோதி மூதாட்டி பலி

image

கள்ளக்குறிச்சியை அடுத்த அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கிளியம்மாள்(70). இவர் நேற்று மாலை, தனது மகளுடன் வெளியே சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். மேட்டுக்காலனி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது பதிவு எண் இல்லாத டிராக்டர் டிப்பர் பின்பக்கம் வந்து மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே கிளியம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 22, 2025

சேலத்தில் ரவுடிகள் பட்டியல் தயார்

image

சேலம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜான் (எ) சாணக்கியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். போலீசார் விசாரணையில் ரவுடி செல்லத்துரை கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இதன் காரணமாக சேலத்தில் ரவுடிகளின் பட்டியலையும் உளவுப்பிரிவு போலீசார் மூலம் மீண்டும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

News March 22, 2025

தொழிலாளி சடலமாக மீட்பு

image

வீரராகவர் கோவில் குளம் அருகே ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பற்றி விசாரித்த பொழுது இவர் அதே பகுதியை சேர்ந்த சேகர் (தொழிலாளி) என்பதும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் நேற்று முன்தினம் குடித்து விட்டு கால்வாய் அருகே படுத்து கிடந்தவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்தனர்.

News March 22, 2025

கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு: ராணிப்பேட்டை ஆட்சியர் 

image

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (மார்ச் 23ஆம் தேதி) சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அறிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை ஊரக வளர்ச்சி ஆணையரக உத்தரவின்படி கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் மார்ச் 29ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்று ஆட்சியர் சந்திரகலா நேற்று  தெரிவித்துள்ளார்.

News March 22, 2025

சாலையைக் கடக்க முயன்ற பெண் கார் மோதி பலி

image

சென்னை ஓட்டேரி பேங்க் தெருவைச் சோ்ந்தவர் ராமதிலகம் (54). இவர் திருவண்ணாமலை உள்ளிட்ட கோயில்களில் தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் மாமந்தூா் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற போது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 22, 2025

கடலூரில் 100 அரங்குகளுடன் பிரம்மாண்ட புத்தகத் திருவிழா இன்று துவக்கம்

image

கடலூர் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 3ஆவது பிரமாண்ட புத்தகத் திருவிழா மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று தொடங்கி வரும் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகளில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற உள்ளன. புத்தக விரும்பிகள் மற்றும் மாணவர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 22, 2025

நாமக்கல்லில் இளம்பெண் விபரீத முடிவு

image

திருச்செங்கோடு அருகே சிறுமொளசியில் வசித்து வருபவர் முனுசாமி. இவருடைய இளைய மகள் செல்வி (17). கடந்த 2 ஆண்டுகளாக செல்வி வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்தார். இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றும் குணமடையவில்லை. இதனால் செல்வி மனவேதனையில் இருந்து வந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 22, 2025

வேலூரில் மாபெரும் புத்தகத் திருவிழா

image

வேலூர் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத் துறை சார்பில், 3-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா வேலூர் கோட்டை மைதானத்தில் இன்றுமுதல் 30-ஆம் தேதி வரை 9 நாள்களுக்கு தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 80 அரங்குகளில் 200-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களின் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

error: Content is protected !!