Tamilnadu

News March 22, 2025

கோவை: எஸ்.பி கார்த்திகேயன் கடும் எச்சரிக்கை

image

கோவை எஸ்.பி கார்த்திகேயன் இன்று விடுத்த செய்தி குறிப்பில், சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212, வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதில் அறிவுறுத்தியுள்ளார்.

News March 22, 2025

கிருஷ்ணகிரி போலீஸ் தேடும் “புதன்கிழமை கொலையாளிகள்”  

image

ஓசூரில் 12-ம் தேதி இரட்டைக் கொலையிலும், சூளகிரியில் 19-ம் தேதி மூதாட்டி கொலைக்கும் ஒரே சைக்கோ கொலையாளிகள் தொடர்புடையவர்கள் என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மூவரையும் கத்தியால் குத்தி கொன்ற பின்னர் வீடுகளுக்கு தீ வைத்து சென்றுள்ளனர். மூன்றும் புதன்கிழமைகளில் நிகழ்ந்ததால், போலீசார் இவர்களை ‘புதன்கிழமை கொலையாளிகள்’ எனக் குறிப்பிடுகின்றனர். விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

News March 22, 2025

உதகை: முதலமைச்சர் பங்கேற்கும் விழா இடங்கள் ஆய்வு

image

உதகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ள இடம் மற்றும் முதல்வர் திறந்து வைக்கவுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றை தமிழ்வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ, மாவட்ட திமுக செயலாளர் கே.எம்.ராஜூ ஆகியோர் உடன் இருந்தனர்.

News March 22, 2025

அரியலூர்: நுழைவுத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

image

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற சமூக மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு இலவச பயிற்சி வகுப்பை நடத்துகிறது. இதற்கு குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.4 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயிற்சியில் சேரவிருப்பம் உள்ள மாணவர்கள் <>லிங்க் <<>>இந்த இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். உணவு, தங்கும் இடவசதி மற்றும் 11 மாத பயிற்சிக்கான கட்டணத்தொகை வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 22, 2025

மரக்கன்று நடும் போராட்டம்: நடுவீரப்பட்டில் 125 பேர் கைது

image

தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி உட்பட கிராம மக்கள், மலையடிக்குப்பம் பகுதியில் அதிகாரிகள் அகற்றிய முந்திரி மரங்கள் இருந்த அதே இடத்தில் மீண்டும் முந்திரிக் கன்றுகளை நடும் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். பின், தடையை மீறி, முந்திரிக் கன்றுகளை நட முயன்ற பெண்கள் உள்ளிட்ட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.

News March 22, 2025

பெட்ரோல் பங்கில் ரூ.28.46 லட்சம் மோசடி செய்த ஊழியர் கைது

image

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் கஜேந்திரன் எனபவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது பெட்ரோல் பங்கில், முதுநிலை மேலாளராக ச.சதீஷ் (37) பணியாற்றி வந்தார். இந்நிலையில், சதீஷ் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கணக்கில் காட்டாமல் ரூ. 28,46,764 மோசடி செய்தது அண்மையில் தெரியவந்தது. இதுகுறித்து கஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சதீஷை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தார்.

News March 22, 2025

சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற ரூ.3 லட்சம் நிதி : முதல்வர்

image

புதுவை சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் ”விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சை பெற மத்திய அரசு ஒரு திட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.1.5 லட்சம் நிதியும், ஒரு வாரம் சிகிச்சையும் அளிக்கப்படும். மருத்துவமனையில் உள்நோயாளிகளாக கட்டணம் இல்லாமல் சிகிச்சை பெறளலாம். இத்திட்டத்தை புதுச்சேரியில் வியாழக்கிழமை தொடங்கியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

News March 22, 2025

தேனியில் நாளை முதல் கோலாகல துவக்கம் 

image

தேனியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3ஆம் ஆண்டு புத்தகத்திருவிழா நாளை(மார்ச் 23) துவங்குகிறது.பழனிசெட்டிபட்டி மேனகா மில் மைதானத்தில் நாளை மாலை 4:00 மணிக்கு புத்தக திருவிழா துவக்க விழா நடக்கிறது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகிக்கிறார். அமைச்சர் பெரியசாமி துவங்கி வைக்கிறார். இவ்விழா மார்ச் 23 முதல் மார்ச் 30 வரை 8 நாள்கள் நடைபெறவுள்ளது..

News March 22, 2025

சிவகங்கையில் தேனீக்கள் கொட்டி ஒருவர் பலி

image

தேவகோட்டையை சேர்ந்தவர் ஆரோக்கிய சாமி. இவர் வீட்டில் மரத்தை வெட்ட உடப்பன்பட்டியை சேர்ந்த காளிமுத்து வந்தார். மரத்தை வெட்டிய போது மரத்திலிருந்து வெளியேறிய மலை தேனீக்கள் காளிமுத்துவைக் கொட்டின. வீட்டின் வெளியே நின்றிருந்த ராஜாமுகமது அவரது மனைவி, மகன் ஆகியோரை தேனீக்கள் கொட்டியது.இதில் ராஜா முகமது மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

News March 22, 2025

கரூரில் தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு

image

கரூர், மண்மங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ் (37); இவர் கடந்த, 17ல் அப்பிப்பாளையத்தில் உள்ள, உறவினர் வீட்டிற்கு சென்ற போது மொட்டை மாடி தடுப்பு சுவற்றில் அமர்ந்து செல் போனில் பேசியுள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக கீழே விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் தந்தோணிமலை போலீசார் நேற்று வழக்குபதிந்து விசாரணை.

error: Content is protected !!