India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்னிந்தியப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (மார்ச் 22) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களே வெளியே செல்லும்போது குடையுடன் செல்லுங்க. ஷேர் பண்ணுங்க.
தென்னிந்தியப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (மார்ச் 22) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களே வெளியே செல்லும்போது குடையுடன் செல்லுங்க. ஷேர் பண்ணுங்க.
தமிழ்நாட்டில் பருவமழைக் காலம் முடிந்த நிலையில், பல்வேறு பகுதிகளிலும் வெயில் வாட்டி வருகிறது. அவ்வபோது பெய்து வரும் மழையால் வெயில் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோவை,திருப்பூர்,தேனி,திண்டுக்கல், ஈரோடு,தென்காசி, கன்னியாக்குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
வடக்கன்குளம் அருகே உள்ள சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சபரிராம் ( 11 ) என்பவர் பணகுடி தனியார் மெட்ரிக் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்ததுள்ளார். நேற்று இவர் பள்ளி முடிந்து அவரது அண்ணன் ஹரிஹரனுடன் பைக்கில் வந்துள்ளார். அப்போது எதிரே வந்த கார் பைக் மீது மோதியதில் சபரிராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து பணகுடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தி.மலை, சேத்துப்பட்டை அடுத்த அனாதிமங்கலம் கிராமத்தில் பரத் (9) ,தேவேஷ் (4) என்ற இரண்டு சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் குளிக்க சென்றுள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் சிறுவர்கள் வீடு திரும்பாத நிலையில் சந்தேகத்தின் பேரில் உறவினர் தீயணைப்பு துறை மற்றும் சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் சிறுவர்கள் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
விருதுநகர், மீசலூரை சேர்ந்த பாக்கியராஜ் மகன் வைஷ்ணவ் (9) அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மதியம் இவரது தாய் முத்துலட்சுமி வீட்டிற்கு வந்தபோது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் தட்டி பார்த்து திறக்காததால் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்ற போது வைஷ்ணவ் கழுத்தில் தொட்டில் கயிறு இறுகி உயிரிழந்தார். இது குறித்து சூலக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டீ கடை மாஸ்டர் கைது செய்யப்பட்டார். சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முகமது இஸ்மாயில் (44) என்பவரை நேற்று (மார்ச்.21) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சங்கரன்கோவில் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
கோவை மருதமலை அடிவாரத்தில் மலையாள சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த படத்தில் நடித்து வரும் துணை நடிகர்கள் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கியிருந்தனர். அவர்களுடன் துணை நடிகர் கேரளா மலப்புரத்தை சேர்ந்த ஹரிதாசன் (39) என்பவரும் தங்கியிருந்தார். நேற்று அவர் அறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலத்தை சேர்ந்த 23 வயது பெண், மறைமலைநகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.இவர் கடந்த 19ம் தேதி விடுதியில் உள்ள குளியல் அறையில் குளிக்கும் போது ஒருவர் அவரை ஜன்னல் வழியாக மொபைல்போனில் வீடியோ எடுத்து உள்ளார்.இதைப் பார்த்து அவர் கூச்சலிடவே, அந்த மர்ம நபர் தப்பிச் சென்றார்.இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பெரம்பலுாரை சேர்ந்த அருள்தாஸ் என்பவரை கைது செய்தனர்.
சென்னையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளிகள், தனியார் பள்ளிகளும் இன்று (மார்.22) இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதுவும், வெள்ளிக்கிழமை அட்டவணைப்படி பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, பள்ளி மாணவர்கள் அனைவரும் விடுமுறை என்று நினைத்து வீட்டிலேயே தூங்கி விடாதீர்கள். மறக்காமல் மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.