India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. தளவாய் மதுக்குமாரி தலைமையில் மார்ச்.27 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் நடைபெற உள்ளது. மார்ச் 24 ஆம் தேதி ஏலத்திற்கு உண்டான காவல் வாகனங்கள் பார்வைக்கு வைக்கப்படும். அதனை தொடர்ந்து ஏலம் எடுக்க முன் தொகை செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஜார்ஜ் டவுனில் பிரசித்தி பெற்ற காளிகாம்பாள் கோவில் உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு பஞ்ச பூத ஸ்தலங்களுக்கு உண்டான சம புனிதத்தன்மை இக்கோயிலுக்கும் உண்டு. மேலும், இந்த குழந்தை வரம், திருமண வரம் போன்ற வேண்டிய வரத்தை அள்ளிக்கொடுக்கும் அம்மனாக உள்ளார். உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கவும் பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகிறாரகள். ஷேர் பண்ணுங்க.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ? அல்லது ரவுடிகள் தொல்லை இருந்தாலும் கீழ்கண்ட எண்ணில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாநகர காவல் துறை சார்ந்த அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
*சமயபுரம் மாரியம்மன் கோயில்
*உறையூர் வெக்காளி அம்மன் கோயில்
*புத்தூர் குழுமாயி அம்மன் கோயில்
*தென்னூர் உக்கிரகாளியம்மன் கோயில்
*மலைக்கோட்டை வானப்பட்டறை மாரியம்மன் கோயில்
*உறையூர் செல்லாண்டி அம்மன் கோயில்
*மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில்
*உறையூர் வாராஹி அம்மன் கோயில்
*கண்ணபுரம் மாரியம்மன் கோயில்
இந்த கோயில்களுக்கு நீங்க சென்றதுண்டா? இதை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
தென்காசி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் புதிய மினி பேருந்து திட்டம்-2024 ன் கீழ் தென்காசி மாவட்டத்தில் 53 சிற்றுந்துகள் (மினி பஸ்) இயக்க மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் அதற்கான ஆணைகளை இன்று வழங்கினார். இதையடுத்து தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், கிராமங்களில் மீண்டும் மினி பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. *இந்த நற்செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்*
வடக்கன்குளம் காவல்கிணறு சாலையில் இரு பைக்குகள் மோதி விபத்து ஏற்பட்டு பணகுடி புனித அன்னாள் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர் சபரி ராம்(11) என்பவர் பலியானார். பலியான மாணவர் வடக்கன்குளம் அருகே உள்ள சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. காயம் அடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பணகுடி காவல் ஆய்வாளர் ராஜாராம் அவர்கள் விசாரணை செய்து வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து துறை சார்பில் 11 புதிய வழித்தடங்களில் மினி பஸ் சேவை வழங்க விண்ணப்பதாரர்களுக்கு செயல்முறை ஆணைகளை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் வழங்கினார். அதன்படி தூத்துக்குடியில் 6 புதிய வழித்தடங்களும் கோவில்பட்டியில் 5 புதிய வழித்தடங்களும் என மொத்தம் 11 புதிய வழித்தடங்களில் மினி பஸ் சேவை இயக்கப்பட உள்ளது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே தகரவெளி பகுதியில் அமைந்துள்ள புற்றடி மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு காணிக்கையாக வழங்கப்பட்ட உயிர்சேவல்களை ஏலம் விடும் நிகழ்ச்சி கோவில் நிர்வாகம் சார்பில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் ரூ.13.77 லட்சத்திற்கு காணிக்கையாக வழங்கப்பட்ட சேவல்கள் ஏலம் போனதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏ பி.ரமேஷ், கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் மீண்டும் நடைமுறைக்கு வருமா? எனக் கேட்டிருந்தார். இதற்கு முதல்வர் என்.ரங்கசாமி, சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டு, நலிவடைந்து, செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மீண்டும் அதை செயல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது என்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 700 குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு அரசுகளில் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். நீரை பெருக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
Sorry, no posts matched your criteria.