Tamilnadu

News March 21, 2025

தேனி :வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம்

image

நாட்டுக்காக தங்களது இளம் வயதை ராணுவ பணிகளில் கழித்து ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்கள் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும் வாழ்வாதார மேம்படுத்திடவும் வங்கி கடன் பெறலாம். முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் , தொழில் தொடங்க ஒரு கோடி வரை வங்கி கடன் பெறுவதற்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

News March 21, 2025

மதுரை: கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் (மார்ச் 21, 22) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், தமிழ்நாட்டில் 2 டிகிரி செல்சியஸ் வரை  வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

News March 21, 2025

கடலூர் மக்களுக்கு கலெக்டர் அறிவுரை

image

கடலூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவ கூடும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படியும் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும். மேலும் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணிவரை அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News March 21, 2025

காரைக்குடியில் கொலை – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

image

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் கஞ்சா வணிகர் காவல்நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக சென்ற போது அவரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்திருக்கிறது என்பதிலிருந்தே தமிழகத்தில் கொலையாளிகள் காவல்துறை மீது எந்த அளவுக்கு அச்சமின்றி துணிச்சலுடன் செயல்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். மேலும் தமிழகத்தில் தினமும் குற்றங்கள் நடக்கிறது என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News March 21, 2025

தூத்துக்குடியில் கேபிள் டிவி இணைப்பு இல்லாத ஊர்

image

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் பேட்மாநகரம் என்ற ஊர் உள்ளது. தொலைக்காட்சிகளில் கேபிள் டிவி மூலம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பிய நாளிலிருந்து இன்று வரை இந்த ஊரில் மட்டும் கேபிள் டிவி இணைப்புகள் கிடையாது. ஊர் கமிட்டி சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கேபிள் டிவி இணைப்புகள் இல்லாமலே இந்த ஊர் உள்ளது. ஆச்சரியமாக இல்லை? *புது தகவல் என்றால் நண்பர்களுக்கும் பகிரவும்*

News March 21, 2025

இராணிப்பேட்டையில் நாளை பள்ளிகள் செயல்படும்

image

இராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று(மார்.21) வெளியிட்டுள்ள சுற்று அறிக்கையில் இராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை (22.03.2025) முழு வேலை நாளாக செயல்பட அறிவிக்கப்படுவதாகவும், புதன் கிழமை கால அட்டவணை பின்பற்றப்பட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News March 21, 2025

ஈரோட்டில் பெண்களுக்கு இலவம்!

image

ஈரோடு அடுத்த சித்தோடு – அரசினர் பொறியியல் கல்லூரி பகுதியில், கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், பெண்களுக்கான அழகுக்கலை இலவச பயிற்சி வகுப்பு ஏப்ரல் 2 முதல் மே 10 வரை நடைபெற உள்ளது. இதில் பயிற்சி, சீருடை உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். விருப்பம் உள்ள நபர்கள் 0424 2400338, 8778323213, 7200650604 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News March 21, 2025

மதுரையில் பொது ஏலம் அறிவிப்பு

image

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. தளவாய் மதுக்குமாரி தலைமையில்  மார்ச்.27 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஏலம்  நடைபெற உள்ளது. மார்ச் 24 ஆம் தேதி ஏலத்திற்கு உண்டான காவல் வாகனங்கள் பார்வைக்கு வைக்கப்படும். அதனை தொடர்ந்து ஏலம் எடுக்க முன் தொகை செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2025

வரத்தை வாரி வழங்கும் காளிகாம்பாள்

image

சென்னை ஜார்ஜ் டவுனில் பிரசித்தி பெற்ற காளிகாம்பாள் கோவில் உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு பஞ்ச பூத ஸ்தலங்களுக்கு உண்டான சம புனிதத்தன்மை இக்கோயிலுக்கும் உண்டு. மேலும், இந்த குழந்தை வரம், திருமண வரம் போன்ற வேண்டிய வரத்தை அள்ளிக்கொடுக்கும் அம்மனாக உள்ளார். உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கவும் பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகிறாரகள். ஷேர் பண்ணுங்க.

News March 21, 2025

சேலம் மாநக இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ? அல்லது ரவுடிகள் தொல்லை இருந்தாலும் கீழ்கண்ட எண்ணில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாநகர காவல் துறை சார்ந்த அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!