Tamilnadu

News March 21, 2025

தர்மபுரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தருமபுரியில் கடந்த சில தினங்களாக, வெயில் சுட்டெரித்து வந்தது. இதனிடையே நகரின் சில பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மாவட்டத்தில் சில இடங்களில் நாளை (மார்ச்.22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை வெளியே செல்லும் போது குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை மறக்காம எடுத்துட்டு போங்க. ஷேர் பண்ணுங்க

News March 21, 2025

விருதுநகர் : புதிய வழித்தட மினிபஸ்களுக்கு அனுமதி !

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (21.03.2025) போக்குவரத்துத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத்தில் சிற்றுந்து புதிய வழித்தடத்திற்கு அனுமதி வழங்குவது குறித்த செயல்முறை ஆணையினை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கினார்.

News March 21, 2025

சென்னையில் இந்த உணவுகளை மிஸ் பண்ணாதீங்க!

image

1.பர்மா உணவுகள், வடா பாவ் (பாரிஸ் கார்னர்), 2. கெபாப், இப்தார் உணவுகள் (மண்ணடி), 3. பீப் கடாய் ரோஸ்ட் (தாஷ மக்கான் தெரு), 4. பன் பட்டர் ஜாம் (மவுண்ட் ரோடு), 5.சாட், சமோசா, ஜிலேபி (சௌகார்பேட்டை), 6.மீன் வருவல்கள், மரீனா பீச் (லூப் சாலை), 7.சாண்ட்விச், பிரட் ஓம்லெட்- ரெட் கிராஸ் ரோடு, எழும்பூர். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 21, 2025

புதுச்சேரியில் ரூ.1000 கேட்டு குவிந்த பெண்கள் 

image

மகளிருக்கு அறிவிக்கப்பட்ட ரூ.1,000 உதவித்தொகை கேட்டு புதுச்சேரி மகளிர் மேம்பாட்டு துறை அலுவலகத்தில் பெண்கள் குவிந்தனர். அவர்களிடம், இதுவரை அரசிடம் இருந்து எந்த ஆணையும் வரவில்லை. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய பின்பே உதவித்தொகை வழங்கும் பணி பயன்பாட்டுக்கு வரும். இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பெண்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

News March 21, 2025

சர்ப தோஷம் நீக்கும் கீழப்பெரும்பள்ளம் கேது பகவான்

image

கீழப்பெரும்பள்ளத்தில் உள்ளது நாகநாதர் கோயில். நவகிரகங்களில் ஒருவரான கேது பகவான் மனித உடலும், பாம்பு தலையும் கொண்டவர். பார்கடலை கடைய உதவிய வாசுகி பாம்பு தன் பாவம் போக்க சிவபெருமானிடம் வேண்ட, வாசுகி பக்தியை கண்டு நாகநாத சாமி எனும் பெயரில் இக்கோயிலில் மூலவராக உள்ளார். நாக தோஷம் நீங்க இவரை வழிபடுவது சிறப்பு. இவருக்கு கொள்ளு வைத்து வழிபட்டால் தீரா நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. SHARE செய்யவும்

News March 21, 2025

சூரிய சக்தி பேனல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்ற தனியார் சோலார் பேனல் நிறுவனத்தில் பயிற்சியுடன் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. டிகிரி,டிப்ளமோ, ஐடிஐ, +2 தேர்ச்சி பெற்றிந்தால் போதும். சென்னையில் இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் மாத சம்பளம் 15,000 முதல் 25000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்க கிளிக்<<>> பண்ணுங்க. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. 

News March 21, 2025

கோவை ரயில்வே பயணிகள் கவனத்திற்கு

image

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக, திருவனந்தபுரம் வடக்கு – ஷாலிமார் இடையே, வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரம் வடக்கு – ஷாலிமார் ரயில் 28.03.2025 மற்றும் 04.04.2025 ஆகிய தேதிகளில், 4.20 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, 13.40 மணிக்கு ஷாலிமாரை சென்றடையும் என ரயில்வே துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 

News March 21, 2025

இளைஞர் படுகொலை வழக்கில் 6 பேரிடம் விசாரணை 

image

திருவாலங்காடு அருகே சின்னம்மா பேட்டை லோகேஷ் (24) இவர் கஞ்சா போதை பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் லோகேஷை அடையாளம் தெரியாத நபர்கள் நார்த்தவாடா செல்லும் சாலையில் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையிலான போலீசார் சந்தேகத்தின் பேரில் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 21, 2025

நீலகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வந்தது. இதனிடையே உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழையும் பெய்தது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி மாவட்டத்தின் சில இடங்களில் நாளை 22-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது. SHARE IT

News March 21, 2025

திருப்பூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

image

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக, வெயில் சுட்டெரித்து வந்தது. இதனிடையே நகரின் சில பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக, பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் சில இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

error: Content is protected !!