Tamilnadu

News March 21, 2025

குமரி எரிவாயு நுகர்வோருக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

குமரி மாவட்ட ஆட்சியரகத்தில் 24.03.2025 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் எரிவாயு நிறுவனங்களின் மேலாளர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே, எரிவாயு நுகர்வோர்கள் இதில் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார். *நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்தவும்*

News March 21, 2025

சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்

image

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (மார்ச்.22) இயங்கும் என பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அட்டவணை அடிப்படையில் நாளை பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், திருத்திய கால அட்டவணைப்படி நாளை பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.

News March 21, 2025

திருவாரூரில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் மார்ச்.23 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் திருவாரூர் புதிய பேருந்து நிலைய நுழைவாயில் அருகே ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாதா ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

News March 21, 2025

சேலத்தை கலக்கும் ‘குளுகுளு’ ஆட்டோ

image

சேலம் குரங்குசாவடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுப்பிரமணி(74) . இவர் தனது ஆட்டோவின் கூரையில் சோளத் தட்டு மற்றும் வைக்கோல் கட்டி அதன் மீது குளிர்ந்த தண்ணீரை தெளித்து, வலம் வருகிறார். அதேபோல் சிறிய தண்ணீர் டேங்க், மொபைல் சார்ஜிங் பாயிண்ட், ஃபேன் ஆகியவற்றை ஆட்டோவில் இணைத்துள்ளார். சேலத்தை கலக்கும் இந்த ஆட்டோ குறித்து உங்கள் கருத்து என்ன? 

News March 21, 2025

JEE பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்கள் தாட்கோ மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் இணைந்து வழங்கும் அகில இந்திய நுழைவுத் தேர்விற்கு (JEE Mains) பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (மார்ச்.21) தெரிவித்துள்ளார்.

News March 21, 2025

TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு!

image

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அந்தவகையில், குரூப் 4 தேர்விற்கு பயிற்சி வகுப்பு மார்ச் 25ம் தேதி காலை 10.30 மணியளவில் தொடங்கவுள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் 04286-222260 எண் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். SHARE IT!

News March 21, 2025

கரூரில் 45 மையங்களில் பிளஸ் டூ பொதுத்தேர்வு

image

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இன்று வேதியியல், கணக்கியல், புவியியல் பாடப் பிரிவுகளுக்கான தேர்வு நடைபெறுகிறது. கரூர் மாவட்ட அளவில் 45 மையங்களில் 4,741 மாணவர்கள், 5,470 மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர் என  மாவட்ட கல்வி நிர்வாகம் அறிவித்துள்ளது.

News March 21, 2025

மதுரையில் கனமழை வாய்ப்பு

image

மதுரை, தேனி, திண்டுக்கல்,விருதுநகர், தென்காசி தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில்
இன்றும், கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளையும் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தமிழ்நாட்டில் வரும் 25ம் தேதி வரை ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News March 21, 2025

பணகுடியில் பைக் மீது கார் மோதி இருவர் பலி

image

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல் கிணற்றில் நேற்று (மார்ச்-20) மாலை காருடன் பைக் மோதிய விபத்தில் இருவர் பலியானார். இதில் பைக்கில் வந்த நாகர்கோவிலை சேர்ந்த நாகராஜன் மற்றும் வினோத் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலே பலியாகினர். இது குறித்து பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 21, 2025

அரசு பஸ் மோதி கார் பலத்த சேதம் – உயிர் தப்பிய இருவர்

image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சக்குடி விளக்கில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனம் மீது எதிரே வந்த அரசு பேருந்து மோதியது. இதனால் காரின் முன் பகுதி சேதமடைந்தது. சீட் பெல்ட் அணிந்திருந்ததால் காரில் பயணித்த நபர்கள் உயிர் தப்பினர். திருப்புவனம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

error: Content is protected !!