India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. பள்ளிக்கு – 09.05.2025 மற்றும் கல்லூரிக்கு – 10.5.2025 நடைபெற உள்ளது. முதல் 150 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். முதல் பரிசு 10,000 ரூபாய், இரண்டாம் பரிசு 7000 ரூபாய் , மூன்றாம் பரிசு 5,000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 9442881369 இந்த எண்ணை அழைக்கவும்.
செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07695) இயக்கப்படுகிறது. புதன்கிழமை தோறும் செகந்திராபாத்தில் இருந்து புறப்படும் ரயில் காரைக்குடிக்கு வியாழக்கிழமை இரவு 8.30-க்கு சென்றடையும். தொடர்ந்து சிவகங்கை (இரவு 9.13), மானாமதுரை (இரவு 9.40), ராமநாதபுரம் (இரவு 10.28) வழியாக ராமேஸ்வரத்துக்கு நள்ளிரவு 12.15க்கு சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 19 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நாளை 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை போக்குவரத்து இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெற அறிவுரை.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சித்திரை திருவிழாவில் சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தின் போது நம் பெருமாள், ஆண்டாள் கூடிய மாலை அணிந்து எழுந்தருளுவது வழக்கம். இதற்காக இன்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் பூ மாலை ஆகியவை திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
சேலம் கோட்டத்தில் என்ஜினீயரிங் பணி நடைபெறுவதால் வண்டி எண்: 16844 பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் ஏப்.26, 29 ஆகிய தேதிகளில் கரூர் வரை மட்டும் இயக்கப்படும். வண்டி எண்: 16811 மயிலாடுதுறை-சேலம் மெமு எக்ஸபிரஸ் ஏப்.26, 29-ந் தேதிகளில் காலை 6 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து து புறப்பட்டு கரூர் மாயனூர் வரை மட்டும் இயக்கப்படும் என திருச்சி ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
மதுரையில் ரயில்வே அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பங்கேற்று நெல்லைக்கு தேவையான பல கோரிக்கைகளை முன்வைத்தார். இதில் தென்கை ரயில்வே பொது மேலாளர் சரத் ஶ்ரீவத்சா, மதுரை கோட்ட மேலாளர் சிவகுமார், தலைமை முதன்மை இயக்க மேலாளர் அஜய் கெளசிக், துணை பொது மேலாளர் சுசில்குமார் மௌரியர உள்பட பலர் ங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2025 அன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராமம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்கு மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள வேலை பற்றி தீர்மானம் நிறைவேற்றப்படும். இக்கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். *தெரிந்தவர்களுக்கு பகிரவும்*
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு சார்பில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துவதற்காக கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும், திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் விமான மூலம் இன்று வாடிகன் புறப்பட்டார். அவரோடு அமைச்சர் ஆவடி நாசார் மற்றும் மத போதகர்கள் வாடிகன் செல்கின்றனர்.
கால்பந்துக் கழகம் சார்பில் 20ஆம் ஆண்டு கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் நாளை தொடங்குகிறது. மே 25ஆம் தேதி வரை காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை என இரு வேளைகளிலும் இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க 8675216868 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கால்பந்து கழகச் செயலா் சிக்கந்தா் தெரிவித்துள்ளார்.
அம்மையநாயக்கனூர் சிசுக்கொயில் மருத்துவ குழுவினர் தலைமையில் இன்று குழந்தையின் உடல் தோண்டி எடுத்து சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
விசாரணையில் ஏற்கனவே பெண் குழந்தை இருக்கும் நிலையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் வளர்க்க முடியாது என்றும் கணவர் திட்டுவார் என மன உளைச்சலில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு செய்து சிவசக்தி தாயாரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.