India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. இதில் 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் கலந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in பதிவு செய்யலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மற்றவர்கள் பயன்பெற SHARE பண்ணுங்க..
திருவள்ளூர் – திருத்தணி, நார்த்தவாடா பகுதியில் இன்று (மார்.21) காலை லோகேஷ் (19) என்ற இளைஞரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிய கும்பல் குறித்து திருவாலங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், ஆட்சியர் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்,நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.நெல்லை கோட்டத்தில் 362 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். மார்ச்.21-ஏப்ரல்.21 வரை விண்ணப்பிக்கலாம். <
சித்தூர் மாவட்டம் யாதமரி அடுத்த பட்டரபல்லி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மகன் ஜெயச்சந்திரன் (21). இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது, பரதராமி அடுத்த எல்லையம்மன் கோவில் அருகில் ஆந்திராவிலிருந்து மக்காசோளம் ஏற்றி வந்த லாரி மோதி சம்பவ இடத்தில் ஜெயச்சந்திரன் உயிரிழந்தார்.
தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் ஹைகோர்ட் மகாராஜா. இவர் கடந்த ஆண்டு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது போலீசார் மீது மிளகாய் பொடி தூவி தப்பினார். இந்நிலையில், கிண்டியில் பதுங்கியிருந்த மகாராஜாவை போலீசார் இன்று(மார்ச் 21) சுத்துப்போட்ட நிலையில், அவர் தப்பி ஓடவே துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுச்சேரி முழுவதும் பாதாள சாக்கடை மற்றும் கழிவு நீர் தொட்டிகளை மனிதர்கள் இன்றி நவீன இயந்திரம் மூலம் சுத்தம் செய்ய நடவடிக்கை. நகர பகுதியில் Smart city திட்டத்தின் கீழ் 50 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யப்படுகிறது. இது முழு வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரி முழுவதும் 140 கோடி ரூபாய் செலவில் இதே முறையில் சுத்தம் செய்ய நடவடிக்கை என அமைச்சர் லட்சுமி நாராயணன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மார்ச் 28, ஏப்ரல் 04 தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து சாலிமருக்கும், மார்ச் 31, ஏப்ரல் 07 தேதிகளில் சாலிமரில் இருந்து திருவனந்தபுரம் வடக்கிற்கும் சிறப்பு ரயில்கள் (06081/06082) அறிவிப்பு. இந்த ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகையில், ”புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஏழைகளுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும். மேலும் விரிவான குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். அதுவரை இந்த இலவச 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மரண வலி தணிப்பு சிகிச்சைப் பிரிவில் 2 தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியிடமாகும். இந்த பணி 11 மாதங்களுக்கு மட்டுமே. விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 10 ஆம் தேதி என கல்லூரி முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.