Tamilnadu

News March 21, 2025

இளைஞர்களுக்கான புத்தாக்க பொறியாளர் பயிற்சி

image

தமிழ்நாடு ஆதித் திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, தாட்கோ வாயிலாக, புத்தாக்க பொறியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு, 21 முதல், 25 வயதுக்கு உட்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள், லிங்க் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News March 21, 2025

அணைமேடு ராஜ முருகன் சிலை மறுசீரமைப்பு பணிகள் நிறைவு

image

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அணைமேடு பகுதியில் 56 அடி உயரத்தில் கட்டப்பட்ட ராஜ முருகன் சிலையின் முகம் மற்றும் உடலமைப்பு சரி இல்லை என்று பலர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், முருகன் சிலை மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்தது. தற்போது அதன் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் கும்பாபிஷேக தேதியும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2025

களைக்கொல்லி குடித்தவர் பலி

image

கள்ளக்குறிச்சி அழகாபுரத்தை சேர்ந்தவர் பொன்னுவேல்(38). கடந்த 2 ஆண்டுகளாக நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், மார்ச்.17ம் தேதி ‘களைக்கொல்லி’ மருந்தை குடித்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்யில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

News March 21, 2025

ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா: நீலகிரி போலீஸ் அதிர்ச்சி

image

மண்ணைப் பயன்படுத்தாமல் நீரியல் முறையில் வீட்டுக்குள் சட்டவிரோதமாக சாகுபடி செய்யும் ஹைட்ரோபோனிக்ஸ் வகை கஞ்சா நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பஸ் நிலையத்தில் முதல் முறையாக பிடிபட்டது. இது நீலகிரி காவல் துறையையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த வகை கஞ்சா 1 கிலோ ரூ.1 கோடி மதிப்புடையது என்பதால் காவல்துறை கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்துள்ளார்.

News March 21, 2025

திருப்பூருக்கு ரூ.890 கோடி!

image

திருப்பூர் மாவட்டத்திற்கு ரூ.890 கோடி மதிப்பீட்டில் ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் மேற்கொள்ளப்படும். முத்தூர்-காங்கேயம் குடிநீர்த் திட்டத்தில் குழாய்கள், மோட்டார்கள் உள்ளிட்டவை மறுசீரமைப்பு செய்யப்படும். மேலும், ரூ.2423 கோடியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் 3 ஆண்டில் நிறைவேற்றப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதற்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

News March 21, 2025

நாமக்கல் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவுசெய்யப்பட்டு ரூ.70 ஆக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் நேற்று, அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி கிலோ ரூ.104 ஆக குறைந்தது.

News March 21, 2025

பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

image

காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர்மேடு பகுதியில் வசிக்கும் இளங்கோ (32), காஞ்சிபுரம் நகரில், மாட்டு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்கிறார். இந்நிலையில், பிள்ளையார்பாளையம் கிழக்கு பகுதியில் நேற்று (மார்.20) வியாபாரம் செய்தபோது, உதயா (19) என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி கத்தியை காட்டி ரூ.1,000 பணத்தை பறித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி உதயாவை அதிரடியாக கைது செய்தனர்.

News March 21, 2025

மூச்சுத் திணறி 5 மாத பெண் குழந்தை பலி

image

பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம் அடுத்த பூனையானுர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (30) என்பவருக்கு இனியா ஸ்ரீ என்ற 5 மாத பெண் குழந்தை இருந்தது, இந்த குழந்தைக்கு நேற்று மூச்சு திணறல் அதிகமானதால், குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

News March 21, 2025

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளி உண்டு

image

திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ( பொ) செளந்தரராசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை (மார்ச்.22) சனிக்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாளாகும். தமிழ்நாடு அரசு புதிய நாட்காட்டியின்படி முழு ஆண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் விதமாக சனிக்கிழமை முழு வேலைநாள் என்று தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் SHARE பண்ணுங்க..

News March 21, 2025

விழுப்புரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (மார்ச்.21) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2மணி வரை நடைபெற உள்ளது. வயது: 18 – 35 வயது வரை. கல்வி தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, பொறியியல், ஐடிஐ, முடித்தவர்கள் பங்கேற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 04146 226417 மற்றும் 9499055906 என்ற தொலைபேசி எண்களை அழைக்கவும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!