Tamilnadu

News March 21, 2025

வெப்ப அலை பரவல்: ஆட்சியர் அறிவுரை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெப்ப அலை பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த ஆயத்தக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (மார்ச் 20) நடைபெற்றது. தமிழகத்தில் வெப்ப அலை பரவல் எதிரொலியாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா அறிவுரை வழங்கினார்.

News March 21, 2025

மனைவியும் சுய இன்பத்தில் ஈடுபடலாம் – நீதிமன்றம்

image

கரூரைச் சேர்ந்த தனது மனைவி ஆபாச படங்கள் பார்ப்பதால் விவாகரத்து கேட்ட கணவர் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர் நீதிமன்றம், ‘ஆண்கள் சுய இன்பம் செய்வதை உலகம் ஏற்றுக்கொள்ளும் போது பெண்களுக்கு மட்டும் அதற்கு தனியுரிமை இல்லையா..?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், மனைவி சுய இன்பத்தில் ஈடுபடுவது கணவனை துன்புறுத்து குற்றம் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

News March 21, 2025

பிரபல ரவுடிகளால் காஞ்சிபுரம் போலீசாருக்கு தலைவலி

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2023இல் 34 கொலைகள் நடந்ததாகவும், 2024இல் அவை 20ஆக குறைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில், 2025ஆம் ஆண்டு தொடங்கியது முதல் முக்கிய ரவுடிகளின் செயல்பாடுகள் போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரத்தின் பிரபல ரவுடிகளான தியாகு, தினேஷ் மற்றும் தணிகா ஆகிய மூவரையும் தேடி பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

News March 21, 2025

மினி பஸ் வழித்தடம் வேண்டி விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 23

image

நாமக்கல் மாவட்டத்தில் மினி பஸ் இயக்குவதற்கான புதிய விரிவான திட்டத்தின் கீழ் புதிய வழித்தடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினிப் பேருந்துக்கான SCPA விண்ணப்பப் படிவத்தினை Parivahan மூலமாக விண்ணப்பித்து Onlineஇல் கட்டணம் ரூ.1600 செலுத்தி பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் ஆவணங்களுடன் வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் மார்ச் 23ஆம் தேதிக்குள் ஒப்படைக்கலாம்.

News March 21, 2025

ஆளை மாற்றி கொலை செய்த கொடூரம்

image

மதுரை சிலைமானில் அழகர்சாமி என்ற டிரம்ஸ் இசைக் கலைஞர் கடந்த 12-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அலங்காநல்லூரில் சரவணன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்க கல்மேடு பகுதியைச் சேர்ந்த ஒருவரைத் தேடி வந்தபோது, ஒருவர் ஆளை மாற்றி அழகர்சாமியைக் காட்டியதால் இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

News March 21, 2025

ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்

image

திருத்தணியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியிடம், ஜோதிநகரை சேர்ந்த வெங்கடேசன் (26) , காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார், இதை நம்பிய அம்மாணவியை மூன்று நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து,நேற்று வெங்கடேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

News March 21, 2025

காட்பாடி போலீசார் பணியிட மாற்றம்; வேலூர் எஸ்பி உத்தரவு 

image

காட்பாடி அடுத்த பனமடங்கி காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக குமரேசன், தனிப்பிரிவு காவலராக ராஜன்பாபு ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் 2 பேரும் பணியில் மெத்தனமாக இருந்ததாக பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து 2 பேரையும் வேலூர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து எஸ்பி மதிவாணன் நேற்று உத்தரவிட்டார். இச்சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 21, 2025

திருப்பூரில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

image

திருப்பூர் செரங்காடு பகுதி சேர்ந்தவர் பிரகாசம், பனியன் நிறுவன தொழிலாளி. இவர் 13 வயது சிறுமிக்கு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இந்த வழக்கு விசாரணை  திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. பிரகாசத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

News March 21, 2025

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில் நிலத்தகறாரில் கடந்த 2019 ஆம் ஆண்டு ராஜேஷ் என்பவரை கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த தேவராஜ், மனோஜ் குமார், விஜயகுமார் ஆகிய மூன்று பேருக்கு ஓசூர் மாவட்ட அமர்வு கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 25,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

News March 21, 2025

சென்னையில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

image

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வரும் 26.03.2025- 28.03.2025 தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு, தொழில் முனைவோர் மேம்பாடு & புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, 8668108141 /8668102600 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!