India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் பிரபல ரவுடி சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைகோர்ட் மகாராஜா என்ற ரவுடி மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் கிண்டியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரை கைது செய்ய முயற்சி செய்யும்போது, அவர் தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் அவரை சுட்டுப்பிடித்தனர்.
ஈரோடு, அஞ்சல் துறை மூலம் சிறுசேமிப்பு திட்டங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்படுகின்றன. தற்போது தொழில் நுட்ப மேம்பாட்டை பயன்படுத்தி, படிவம் இன்றி எளிமையாக பரிவர்த்தனை மேற்கொள்ள, ஆதார் அடிப்படையிலான அங்கீகார செயல்முறை (e-KYC) பரிவர்த்தனை திட்டம் அறிமுகமாகி உள்ளது. இவ்வசதி, ஈரோடு கோட்டத்தில் உள்ள ஈரோடு, பவானி, கோபி தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அனைத்து துணை அஞ்சலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் தலத்தெருவைச் சேர்ந்த ரூபன், கடன் செயலி மூலம் ரூ.1,800 கடன் பெற்று அந்த பணத்தை திருப்பி செலுத்திய பிறகும் அவரது படத்தை ஆபாசமாக சித்தரித்து அவருக்கு அனுப்பி வைத்து மேலும் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரூபன் ரூ.10000 அனுப்பியுள்ளார். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டவே, ரூபன் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்
விழுப்புரம் மாவட்டம் வளவனூா், பாலாஜி நகரை சோ்ந்தவர் அய்யப்பன் (13). வளவனூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 8-வது படித்து வந்தாா். அய்யப்பனும், இதே பகுதியைச் சோ்ந்த கவின் (12), சைக்கிளில் சென்றனர். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து சைக்கிள் மீது மோதியது. இதில், அய்யப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கவின் படுகாயமடைந்தார். புகாரின் பேரில் ஓட்டுநர் மீது வளவனூா் போலீசார் விசாரிக்கின்றனர்.
சந்தன மாநகர் என்றும் அழைக்கப்படும் திருப்பத்தூர் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் “திருப்பத்தூர்” என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் திருவனபுரம் என்ற பெயரை “திருப்பத்தூர்” என்று மாற்றியதாக கூறப்படுகிறது. உங்களை போல் மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் செய்யுங்கள்.
பெரியப்பட்டியை சேர்ந்தவர் பிரபு (20) இவர் 16 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமடைந்த சிறுமியை கடந்த ஜன.20 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் அச்சிறுமிக்கு கடந்த, 11ல் கரு கலைந்துள்ளது, தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.இதையறிந்த காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் குழந்தை திருமணம் குறித்து அதிகாரிகள் பல்வேறு நடவக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து கோவை மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா கூறுகையில், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், ஆனைமலை பகுதியில் குழந்தை திருமணம் அதிகம் நடக்கிறது. இதை தடுக்கும் விதமாக கிராமம் வாரியாக குழு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும், குழந்தை திருமணம் குறித்து தகவல் அளித்தார் ரூ.2,000 வெகுமதி வழங்கப்படும் என்றார்.
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் தொடர்புடைய 37 சிறார்கள், கடந்த பிப்.21 நீதிமன்றத்தில் ஆஜராகினர். பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, 2022ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 1,100 பக்க இறுதி அறிக்கை நகல், வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், இதன் விசாரணை இன்று நடைபெறுகிறது.
குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் அதற்கான ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதத்துடன் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் ரா.பிருந்தாதேவி எச்சரித்துள்ளார். மேலும், விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் நலக் குழு கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரையை 99409-91160 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மலை, செய்யாறு அடுத்த வெம்பாக்கத்தை சேர்ந்தவர் வினோத் குமார். காஷ்மீரில் 62வது படை தளத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்தார். கடந்த 18ம் தேதி காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில், வலது மார்பில் குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று சொந்த ஊரான வெம்பாக்கம் கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.