India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று மார்ச் 20 இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ரமலான் திருநாளை முன்னிட்டு சென்னை சென்ட்ரலிருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக போத்தனூர் வரை செல்லும் சிறப்பு ரயில் (06027) மார்ச் 30 இரவு 11.30 க்கு சென்னையில் இருந்து புறப்படும். மறு மார்க்கத்தில் போத்தனூரிலிருந்து சென்னைக்கு (06028) மார்ச்.31 காலை 8.20 க்கு புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தற்போதே அதிகரித்துள்ளது. இதனால், நீர்ச்சத்து இழப்பு, மயக்கம், தலைசுற்றல், வெப்பவாதம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் வெப்பவாத சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் திருப்பூர் மாவட்ட காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தில் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது குடிமங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த மூன்று நபர்களை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 20.03.2025-ம் தேதி இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு நேராந்து பணியை நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் குற்ற சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் விதமாக இன்று ரயில்வே பாதுகாப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில் மோப்ப நாய் உதவியுடன், ரயில் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. மேலும் ரயிலில் இருந்து கொண்டு வரப்படும் பார்சல்கள் மற்றும் பார்சல் மையங்களையும் மோப்ப நாய் உதவியுடன் ஆராய்ந்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்கோவை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் புத்தாக்கப் பொறியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 18 வாரங்கள் கொண்ட இந்த பயிற்சி கோவை திருச்சி, சேலம், ஓசூர் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன் வழங்கப்படும் என்றார்.
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்குள் உள்ள தளவாடப் பொருட்களை உடனடியாக அகற்றிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பொருட்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அகற்றப்படும் பொருட்கள் குஜராத்தில் உள்ள டாமன் – டையூ பகுதிக்குக் கொண்டு செல்லப்படும் என தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் இன்று (20.03.2025) தெரிவித்துள்ளார்.
நாமக்கல் – மோகனூர் சாலையில் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற சைபர் குற்றம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது ஆன்லைன் டிரேடிங், திட்டங்களில் முதலீடு, டாஸ்க்கை எதிர்கொள்ளுதல் போன்ற வழிகளில் பணத்தை இழந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால், உடனடியாக இழந்த பணத்தை நிறுத்தி வைக்க முடியும் என்று தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் இன்று (20.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.