India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை அலுவலக நிர்வாகம், ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ரயிலில் பயணம் செல்லும் பயணிகள் பட்டாசு பொருள்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்வது கண்டறியப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது ரயில்வே சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
“தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு 604 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதில் ரூபாய் 12 லட்சம் முடக்கப்பட்டும், ரூபாய் 48 லட்சம் நீதிமன்ற உத்தரவின்படி மீட்கப்பட்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பொது விவாதத்தின் போது சாத்தான்குளம் தாலுகா, எழுவரைமுக்கி ஊராட்சி பகுதியில் சிப்காட் அமைக்கப்படுமா என்கிற கேள்விக்கு, பதில் அளித்த அமைச்சர் டிஆர்பி ராஜா, “தூத்துக்குடியில் 10 சிப்காட் அமைக்கும் திட்டம் அரசுக்கு உள்ளதாகவும், அதில் 7 அறிவிக்கப்பட்டு தற்போது 4 முடிந்துள்ளதாகவும், 3 சிப்காட் பணிகள் நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.
மத்திய அரசின் திட்டமான சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான கட்டணம் இல்லா சிகிச்சை திட்டம் தொடக்க விழா மற்றும் பயிற்சி முகாம் புதுச்சேரி காவல்துறை சார்பில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [மார்ச்.20] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில், கடந்த 2024 ஏப்ரல் மாதம் முதல் 2025 பிப்ரவரி மாதம் வரை 2,34,881 விவசாயிகள், தங்களது விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்து பயனடைந்துள்ளனர். இதில் விழுப்புரம்-27693, திண்டிவனம்-17785, செஞ்சி-47663, அரகண்டநல்லூர்-70571, அவலூர்பேட்டை-37659, விக்கிரவாண்டி-33268, மரக்காணம்-45, வளத்தி-207 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
தி.வெ.நல்லூர் அருகே 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 22,000 அபராதம் வழங்கி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தின் அடிப்படையில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில் நீதிபதி இளவரசன் தீர்ப்பளித்தார்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மார்ச் 20) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம், ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள (20-03-2025) வியாழக்கிழமை அன்று இரவு ரோந்து போலீசார் விவரங்களை காவல் நிலையம் வாரியாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குற்ற சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் குறித்து தகவல்கள் தெரிவிக்க மேற்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.