Tamilnadu

News March 20, 2025

நாமக்கல்லில் தோஷம் நீக்கும் கோயில்!

image

நாமக்கல், பெரியமணலியில் நாகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. நாகம் நேரில் வந்து இங்குள்ள மூலவரை வழிபட்டதால் இத்தல இறைவன் நாகேஸ்வரர் என அழைக்கப்படுவது சிறப்பு. இங்கு வந்து சிவனாரை வழிபட்டுப் பிரார்த்திக்க, நாக தோஷம் முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும், திருமணத் தடை நீங்க, கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டிக் கொள்கின்றனர்.

News March 20, 2025

ஓடத்துறை பாலத்தில் உயிரிழப்பு

image

மல்லியம்பத்தை சேர்ந்த கண்ணதாசன்(61) இன்று டூவிலரில் ஓடத்துறை பாலத்தில் சென்றபோது நிலை தடுமாறி பாலத்தின் சுவரில் மோதி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே கண்ணதாசன் உயிரிழந்தார். இதையறிந்த வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 20, 2025

சென்னை காவல்துறையில் மாற்றம் 

image

தமிழ்நாடு அரசு மூன்று உயர்மட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக ப்ரவேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக லக்‌ஷ்மி, காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக நரேந்திரன் நாயர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News March 20, 2025

ஆலங்குடி குருபரிகார கோயிலில் சிறப்பு வழிபாடு

image

நவக்கிரகஸ்தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகாரகோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கலங்காமற் காத்தவிநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன்,மூலவர் குருபகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். SHARE NOW….. 

News March 20, 2025

தமிழ்நாட்டிற்காக எந்த தியாகத்தையும் செய்வேன்

image

பண்ருட்டி MLA வேல்முருகன் சட்டப்பேரவையில் தெலுங்கானாவில் நடைபெற்றது போல் தமிழ்நாட்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று‌ பேசினார். இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த எம்எல்ஏ வேல்முருகன், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்றும் சேகர்பாபு என்னை ஒருமையில் பேசினார் என்றும் தமிழுக்காக,தமிழ்நாட்டிற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்

News March 20, 2025

ரசாயன ஊசி செலுத்தப்பட்ட 6 டன் தர்பூசணி பறிமுதல்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் ரசாயன ஊசி செலுத்தப்பட்ட தர்பூசணி பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 9 இடங்களில் சோதனை மேற்கொண்ட உணவுத்துறை அதிகாரிகள் 6 இடங்களில் சுமார் 6 டன் தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், உள்புறம் சிவப்பாக இருப்பதற்காக ஊசி செலுத்தப்பட்டு விற்பனைக்கு வைத்திருந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இதை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 20, 2025

அமேசான், பிளிப்கார்ட் கிடங்குகளில் திடீர் சோதனை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான், பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்குகளில் இந்திய தர நிர்ணய அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் BIS முத்திரை இல்லாத உலோக குடிநீர் பாட்டில்கள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் என ரூ.36 லட்சம் மதிப்பிலான தரமற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தரமற்ற பொருட்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்த நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

News March 20, 2025

குட்காவை விற்ற 1,236 கடைகளுக்கு ரூ.3.20 கோடி அபராதம் விதிப்பு

image

சேலம் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டில் தடைச் செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 1,236 கடைகளுக்கு ரூபாய் 3.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.

News March 20, 2025

கேஸ் பயனாளிகள் வங்கி கணக்கில் ரூ.150 ரூ.300

image

பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் நடுவே, குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் நேற்று பேசும்போது, “தற்போது 2024 அக்டோபர் முதல் ஜனவரி 2025 வரை வாங்கப்பட்ட கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு மஞ்சள் நிற அட்டைக்கு ரூ.150 வீதமும், சிகப்பு நிற அட்டைக்கு ரூ.300 வீதமும், அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.11.50 கோடி செலவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

News March 20, 2025

பஞ்சாமிர்தத்துல இவ்வளவு இருக்கா?

image

’திருப்பதிக்கே லட்டா? பழனிக்கே பஞ்சாமிர்தமா? போன்ற வசனங்களை நம் வாழ்நாளில் பலமுறை கடந்து வந்திருப்போம். சில ஆண்டுகளுக்கு முன்பு பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவி சார் குறியீடு வழங்கப்பட்டது. இந்தக் குறியீடைப் பெற்ற முதல் கோயில் பிரசாதமும் நம் பஞ்சாமிர்தம் தான். ருசி மிக்க பிரசாதமாக மட்டுமில்லாது சித்த முறைப் படி நவபாஷாணத்தால் ஆன பழனியாண்டவர் சிலை தொட்டு வருவதால் இது மருந்தாகவும் நம்பப்படுகிறது.

error: Content is protected !!