Tamilnadu

News March 20, 2025

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் வேலை

image

இந்திய அஞ்சல் துறையின் ஒரு பிரிவான இந்திய அஞ்சல் கட்டண வங்கியில், காலியாக உள்ள 51 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் நாளைக்குள் (மார்.21) இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். வயது 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 20, 2025

நாகையில்: பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு

image

கீழையூர் ஒன்றியம் கீழஈசனூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேசன் (53). இவர் காரப்பிடாகையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு காலையில் வீட்டிற்கு வந்து பார்த்த கதவு பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 பவுன் நெக்லஸ், 1/2 பவுன் மோதிரம் ,1/2 பவுன் தோடு என 3 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் பணம் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது.

News March 20, 2025

ஐந்து நிறங்களில் அருளும் பஞ்சவர்ணேஸ்வரர் திருத்தலம்

image

பாபநாசத்தை அடுத்த நல்லூரில் உள்ளது கல்யாண சுந்தரர் திருக்கோயில் இக் கோயிலில் அருள் பாலிக்கும் ஈசன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்துடன் 5 நிறங்களில் காட்சி தருகிறார். காலை 6 முதல் 8:15 வரை தாமிர வண்ணத்திலும், 8:15 முதல் 11 :30 மணி வரை இளஞ்சிவப்பிலும் , 11:30 முதல் மதியம் 2:30 மணி வரை தங்க நிறத்திலும் , 2:30 முதல் மாலை 5 மணி வரை நவரத்தின பச்சை நிறத்திலும், 5 முதல் 6 மணி வரை செம்மை காட்சி அளித்தார்.

News March 20, 2025

25 கி.மீ., தூரம் வரை செல்ல எல்லை நிர்ணயிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், ஆட்சியர் கலைச்செல்வி முன்னிலையில், குலுக்கல் முறையில் பேருந்துகளை இயக்கும் விண்ணப்பதாரர்கள் நேற்று (மார்ச்.19) தேர்வு செய்யப்பட்டனர். இதில் காஞ்சிபுரம் – பாலுசெட்டிசத்திரம், களியனூர் – பண்ருட்டி சிப்காட் வரை என முக்கிய வழித்தடங்களில், மினி பேருந்துகள் 25 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 20, 2025

குமரி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் விவரம்

image

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 20) 28.66அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 26.05அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.76 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 122 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 23 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

News March 20, 2025

லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 16 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு

image

கோவை சின்னவேடம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில், உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்த துரைராஜிடம், கடந்த 2009 ஆம் ஆண்டு, மணியக்காரன்பாளையத்தை சேர்ந்த தனபாக்கியம், மின் இணைப்பை மாற்றி வழங்க கோரி, ரூ.300 லஞ்சம் கொடுத்தார். அப்போது போலீசார் அவரை கைது செய்தனர். இவ்வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

News March 20, 2025

நெல்லை அஞ்சலக கூட்டத்தில் குறைதீர் கூட்டம்

image

நெல்லை அஞ்சலக முதுநிலைக்கோட்ட கண்காணிப்பாளர் முருகன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் மார்ச் 24 அன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், திருநெல்வேலி கோட்டத்திற்குட்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி  வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 20, 2025

ஈரோட்டிற்கு வந்த நெல் மூட்டைகள்

image

ஈரோடு மாவட்ட பொது விநியோக திட்டத்திற்காக, மயிலாடுதுறையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயிலில், 2,000 டன் நெல் மூட்டைகள்  ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டிற்கு வந்தடைந்தது. அதனை சுமைதூக்கும் தொழிலாளர்கள் லாரியில் ஏற்றப்பட்டு, ஈரோடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் அதிகாரிகள் கூறினார்.

News March 20, 2025

அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநர் வேலை வாய்ப்பு

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை இங்கு https://www.arasubus.tn.gov.in/ செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 20, 2025

அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநர் வேலை வாய்ப்பு

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை இங்கு https://www.arasubus.tn.gov.in/ செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!