India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மடப்புரம் கோவில் செல்லும் வழியில் சந்தனகோடாங்கி(45) கோடாங்கி அடித்து குறி செல்லி வந்துள்ளார். நேற்று மாலை இவரை தினேஷ்குமார்(27) என்பவர் வெட்டி விட்டு தப்பிச்சென்றார். திருப்புவனம் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் கோடாங்கி உயிரிழந்தார். போலீசார் தினேஷ்குமாரை கைது செய்த நிலையில், இவரது உறவுக்கார பெண்ணுடன் சந்தனகோடாங்கி தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளில் 50000 குடியிருப்புகள் மூலம் ஆண்டுக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி, பாதாள சாக்கடை வரி என ரூ.17 கோடி வரை வரி வசூலிக்கப்பட வேண்டும். நடப்பு ஆண்டு வரியுடன் நிலுவையில் உள்ள வரியை வசூலிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வரி செலுத்தாத வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் முன் குப்பை வாகனம், கழிவுநீர் வாகனத்தை நிறுத்தி மிரட்டுகின்றனர்.
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க உள்ளதாக அமைச்சர் K.N.நேரு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர் சென்னை, கோவை, மதுரையில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகக் கூறினார். மேலும், நகரங்களை விரிவாக்கம் செய்யும்போது குப்பைகள் கொட்டும் இடம் மையப்பகுதிக்கு வந்துவிடுவதாகக் குறிப்பிட்ட அவர், குப்பைகள் வெளியே பறக்காமல் இருக்க, குப்பைக் கிடங்கைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது என்றார்.
திண்டுக்கல் அரண்மனைக்குளம் பகுதியைச் சோ்ந்தவர் உமா மகேஸ்வரி (38). கணவா் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். கணவரை பார்ப்பதற்காக சென்னை சென்ற உமாமகேஸ்வரி, சென்னையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயிலில் திண்டுக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டார். உமாமகேஸ்வரி தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது பையில் வைத்திருந்த 4 பவுன் சங்கிலி திருடப்பட்டதாக புகாரில் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
குற்றாலம் பகுதியில் இருந்து இன்று(மார்ச் 20) செங்கோட்டை நோக்கி சென்ற கனிமவள லாரி தாறுமாறாக ஓடி, வல்லம் ஊராட்சி சிலுவை மூக்கு அருகே சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் பேருந்துக்கு காத்திருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதாக பெருமூச்சு விட்டனர். கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனரக லாரிகளின் போக்குவரத்தால் தொடர்ந்து தென்காசி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நாமக்கல் ரயில் நிலையம் வழியாக பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சேலம்-நாமக்கல்-கரூர்-திருச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் திருச்சி-கரூர்-நாமக்கல்-சேலம் இடையே முன்பதிவு இல்லாத ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன, அதன் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு கேளம்பாக்கம் (OMR) பகுதியிலுள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 22.03.2025 மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. 20,000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் கலந்து கொள்வோர்கள் இந்த <
இந்திய அஞ்சல் துறையின் ஒரு பிரிவான இந்திய அஞ்சல் கட்டண வங்கியில், காலியாக உள்ள 51 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் நாளைக்குள் (மார்.21) இந்த லிங்கை <
தருமபுரியில் மாா்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பா்வைசா், மேலாளா், கம்ப்யூட்டா் ஆப்ரேட்டா், அக்கவுண்டன்ட், மெக்கானிக் போன்ற பணியிடங்களுக்கு ஆள்கள் தேவை என தனியாா் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதில் 10,12th மற்றும் பட்ட படிப்பு படித்தவர்கள் நாளை காலை 10 மணிக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறவுள்ள தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளுங்கள், ஷேர் பண்ணுங்கள்.
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 29ஆம் தேதி நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் காலை 8 மணி – மாலை 3 மணி வரை நடத்தப்பட உள்ளது. 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 8th, 10th, 12th படித்தவர்கள் <
Sorry, no posts matched your criteria.