India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரண்மனைபள்ளம் கிராமத்தை சேர்ந்த மாதேஷ், இவரது மனைவி ஆனந்தி. குழந்தை பிறந்ததிலிருந்தே ஆனந்திக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆனந்தி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற +2 தேர்வில் தோல்வியடைந்துள்ளார். இதனால் மன வேதனையில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த செல்லத்துரையின் தாய் அனுஷா, சரிவர சாப்பிடாமல், உடல்நல குறைவு ஏற்பட்டு, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ராணிப்பேட்டை தென்னிந்தியாவின் ஒரு தொழில்துறை மையமாகும், குறிப்பாக தோல் மற்றும் தோல் சார்ந்த பொருட்கள், காலணிகள், ஆடைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேயர்களின் பெரிய இராணுவத்தளமாகவும் இருந்துள்ளது. ராஜா தேசிங்கின் மனைவி ராணிபாயின் நினைவாகத்தான் ராணிப்பேட்டை என்ற பெயர் வந்ததாக அறியப்படுகிறது. இதை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யுங்கள்.
நெல்லை வழியாக நலகொண்டா, குண்டூர், திருத்தணி, காட்பாடி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், விருதுநகர் வழியாக கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சார்லப்பள்ளி – கன்னியாகுமரிக்கு புதன்கிழமையும், கன்னியாகுமரி – சாரலப்பள்ளிக்கு வெள்ளிக்கிழமையும் ஏப்ரல் மாதம் முதல் வாரம் முதல் ஜூன் மாதம் இறுதி வரை இயக்க ரயில்வே நிர்வாகம் நேற்று பரிந்துரைத்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் 176 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்.,21ஆம் தேதி வரை இங்கு <
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கரூர் மாவட்டத்தில் 48 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்.,21ஆம் தேதி வரை <
சென்னையின் நுழைவாயில் என அழைக்கப்படும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக இயங்கி வருகிறது. முன்பு இங்குள்ள நீர்நிலைகளில், செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்திருந்தது. எனவே,செங்கழுநீர்ப்பட்டு என்றழைக்கப்பட்டது. அது மருவி இப்பொழுது செங்கல்பட்டு என அழைக்கப்படுகிறது. இது செங்கை எனவும் அழைக்கப்படுகிறது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் செய்யுங்கள்.
திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ், நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 42 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் Staff Nurse, Hospital Worker உள்ளிட்ட பணிகள் காலியாக உள்ளன. இதில் வேலைக்கு ஏற்றார்போல், 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு வரும் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கு <
திருத்தணி-திருவள்ளூர் நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லட்சுமாபுரம் அருகே மின்கம்பம் மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஜார்க்கண்ட் தொழிலாளர் பிரதீப் மால், மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (மாா்ச்.21) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் விவரங்களுக்கு 98948 89794 எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.