Tamilnadu

News March 20, 2025

திருச்சி விமான நிலையம் தனியார்மயம் – எம்.பி எதிர்ப்பு

image

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி எம்பி துரை வைகோ நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில், இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான விமான போக்குவரத்து, தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும், திருச்சி விமான நிலையத்தை தனியாரிடம் தாரைவார்க்கும் முடிவை கைவிடுமாறும் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 20, 2025

விவசாய நிலத்திற்குள் நுழைந்த ஒற்றை யானை

image

குடியாத்தம் அடுத்த கணவாய்மோட்டூர் கிராமத்தில் நேற்று (மார்ச் 19) ஒற்றை யானை விவசாய நிலத்திற்குள் நுழைந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் பட்டாசுகளை வெடித்தும், மேளம் அடித்தும், தீப் பந்தங்களை காட்டியும் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

News March 20, 2025

போலீசாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்

image

பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் நேற்று (மார்ச் 19) நடைபெற்றது. இம்முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 43 மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தினர், உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.

News March 20, 2025

முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

image

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 5வது தளத்தில் உள்ள அரங்கத்தில், முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (மார்ச் 21) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. எனவே, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயனடையலாம் என கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதனை உங்களுக்கு தெரிந்த முன்னாள் படைவீரர்களுக்கு ஷேர் பண்ணுங்க…

News March 20, 2025

அருவிகளின் அரசி ஒகேனக்கல்

image

தருமபுரி என்றதும் நியாபகம் வருவது ஒகேனக்கல் தான். ஒகேனக்கலின் பழைய பெயர் உகுநீர்க்கல் என்பதாகும் கால போக்கில் தான் ஒகேனக்கல் என்று திரிந்து விட்டது. உள்ளூர்,வெளியூர் சுற்றலா பயணிகளுக்கு சுற்றலா என்றதும் முதலில் நியாபகம் வருவது ஒகேனக்கல் அருவி தான். அப்படிபட்ட வரலாற்றை தனக்கென கொண்டுள்ளது இந்த அருவி. இங்கு பரிசல் சவாரி மற்றும் எண்ணெய் குளியல் என்பது தனி சிறப்பு.

News March 20, 2025

மாணவியிடம் சில்மிஷம், ஆசிரியர் போக்சோவில் கைது

image

கிருஷ்ணகிரி அருகே, தேர்வு எழுத சென்ற பிளஸ் 2 மாணவியிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர், போக்சோவில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து புகாரின்பேரில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சரவணன் விசாரணை நடத்தினர். அதில், தேர்வு எழுதிய மாணவியிடம் ஆசிரியர் ரமேஷ், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், அதே அறையில் மற்றொரு மாணவியிடமும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரிந்தது.

News March 20, 2025

கள்ளக்குறிச்சியில் நேருக்கு நேர் பைக்குகள் மோதி விபத்து

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அரியலூரிலிருந்து திருக்கோவிலூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் மீது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பலத்த காயம் அடைந்த நபர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News March 20, 2025

பைக்கில் புடவை சிக்கி பெண் உயிரிழப்பு

image

திருவாலங்காடு அருகே, ஜெகதீசன் மனைவி அருணாவுடன் மகளை சந்திக்க இருசக்கர வாகனத்தில்  சென்றுள்ளார். பார்த்துவிட்டு ஊருக்கு  திரும்பி வரும்பொழுது, அருணாவின் புடவை இருசக்கர வாகன சக்கரத்தில் சிக்கி, வாகனம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் படுகாயமடைந்த அருணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்வம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 20, 2025

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை தாரர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 31.3.2025-க்குள் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகை (இ. கே.ஒய்.சி.) பதிவு செய்யப் பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News March 20, 2025

விழுப்புரம்: கிணற்றில் மிதந்த சடலத்தால் பரபரப்பு

image

திண்டிவனம் அய்யந்தோப்பு கல்லூரி செல்லும் சாலையோரம் தனியார் ரைஸ்மில் அருகே உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக ரோசணை போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!