Tamilnadu

News March 20, 2025

அரியலூர்-அமைச்சர் எம்.எல்.ஏக்கள் வருவார்களா?

image

அரியலூர் மாவட்டத்தின் சார்பில் இன்று தொடங்கும் 8வது புத்தக திருவிழாவை இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைக்க உள்ளதாகவும் இதில் அரியலூர் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் அமைச்சர் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News March 20, 2025

திண்டுக்கல்லில் ரூ.60,000 வரை சம்பளம்: APPLY NOW

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள District Health Society (DHS) வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். * Medical Officer* Staff Nurse* Health Inspector (Gr -II)* Hospital Workerகாலிப்பணியிடங்கள்: 4பணியிடம்: திண்டுக்கல் மாவட்டம்

News March 20, 2025

புதுவை: ஹெல்மெட் அணியாத 37,107 பேருக்கு அபராதம்

image

சட்டப்பேரவையில் அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், ஒவ்வொரு குடிமகனும், பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி அரசு பிரசாரமும் தொடங்கியுள்ளது. இதுவரை புதுவையில் ஹெல்மெட் அணியாத 37,107 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் உச்சநீதிமன்றம் விபத்து மரணத்தை கண்காணித்து கேட்கிறது. இதனால் புதுவையில் மக்கள் அவசியம் தலைகவசம் அணிய வேண்டும் என பதில் அளித்தார்.

News March 20, 2025

பி.எம். கிசான் திட்டத்தில் தவணைத் தொகை – அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பி.எம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6000 நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. தொகையை பெற அடையாள எண் அவசியம். இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி இலவசமாக அடையாள எண் பெற்றிட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். உங்கள் பகுதியினருக்கு இந்த செய்தியை Share பண்ணுங்க.

News March 20, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(மார்ச் 19) காலை 8:30 மணிக்கு சட்டவிரோத சம்பள வெட்டு முறையை கைவிட வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கிள்ளியூர் சந்திப்பில் தெருமுனை பிரச்சார இயக்கம் நடக்கிறது.#காலை 11 மணிக்கு விவேகானந்தர் படகு குழாம் நீடிப்பு செய்வது குறித்து மீன்துறை உதவி இயக்குநர் வாவா துறை மீனவ கிராம நிர்வாக கமிட்டியினருடன் சின்ன முட்டம் மீன்துறை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

News March 20, 2025

நிறுத்தப்பட்ட கேஸ் மானியம் மீண்டும் வழங்கப்படும்

image

புதுச்சேரி சிவப்பு மற்றும் மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு நிறுத்தப்பட்ட கேஸ் மானியம் மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் திருமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அடுத்த மாதத்தில் இருந்து அனைத்து சிவப்பு மற்றும் மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

News March 20, 2025

திருச்சி விமான நிலையம் தனியார்மயம் – எம்.பி எதிர்ப்பு

image

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி எம்பி துரை வைகோ நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில், இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான விமான போக்குவரத்து, தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும், திருச்சி விமான நிலையத்தை தனியாரிடம் தாரைவார்க்கும் முடிவை கைவிடுமாறும் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 20, 2025

விவசாய நிலத்திற்குள் நுழைந்த ஒற்றை யானை

image

குடியாத்தம் அடுத்த கணவாய்மோட்டூர் கிராமத்தில் நேற்று (மார்ச் 19) ஒற்றை யானை விவசாய நிலத்திற்குள் நுழைந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் பட்டாசுகளை வெடித்தும், மேளம் அடித்தும், தீப் பந்தங்களை காட்டியும் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

News March 20, 2025

போலீசாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்

image

பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் நேற்று (மார்ச் 19) நடைபெற்றது. இம்முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 43 மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தினர், உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.

News March 20, 2025

முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

image

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 5வது தளத்தில் உள்ள அரங்கத்தில், முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (மார்ச் 21) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. எனவே, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயனடையலாம் என கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதனை உங்களுக்கு தெரிந்த முன்னாள் படைவீரர்களுக்கு ஷேர் பண்ணுங்க…

error: Content is protected !!