India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள தேவாசிரியன் மண்டபத்தில் மராட்டிய மன்னர்கள் காலத்தில், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் முழுவதும் மூலிகைகளை மட்டும் பயன்படுத்தி வரையப்பட்ட 96 ஓவியங்கள் உள்ளன. அவை, சிவலீலைகளை விளக்கும் விதமாகவும், திருவாரூர் பெருமைகள் சொல்லும் வகையிலும் வரையப்பட்டன. பக்தி மட்டுமல்லாது அவை பண்டைய வரலாற்றுச் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது. இது தெரியாத உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
உத்திரமேரூர், அரசாணைமங்கலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த 16ஆம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த இளஞ்செழியன் (35) என்பவர், சிறுமியின் வீட்டிற்குள் சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து, சிறுமியின் அக்கா காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் இளஞ்செழியனை போக்சோவில் கைது செய்தனர்.
புதுச்சேரியில் சட்டப்பேரவைக் கூட்டம் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில் புதன்கிழமை காலை தொடங்கியது. அப்பொழுது பேசிய முதல்வர் என்.ரங்கசாமி, புதுவையில் இலவச அரிசியுடன் 2 கிலோ கோதுமை வழங்கப்படும். சிவப்பு குடும்ப அட்டையுள்ள குடும்ப தலைவியருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்குவது போல, மஞ்சள் குடும்ப அட்டைதாரா்களுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.
மாநகராட்சி சார்பில் கொசு புகை மருந்து அடிக்கப்பட்ட பின்னரும் தற்போது கொசுக்கள் அழிவதில்லை. இதனால், புதிய வகை கொசு ஏதும் ஊடுருவி உள்ளதா? நாம் பயன்படுத்தும் மருந்து வீரியமிக்கதாக உள்ளதா? என்று சந்தேகம் ஏற்படுகிறது. புதிய வகை கொசுக்கள் ஊடுருவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கேற்ப கொசு மருந்தை பயன்படுத்தி கொசு பரவலை கட்டுப்படுத்த முடியும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஷேர் செய்யுங்கள்
திருச்சி முசிறி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மினி லாரியில் வாழைப்பழம் லோடு ஏற்றி கொண்டு திருச்சியிலிருந்து கோயம்பேடு நோக்கி வந்துகொண்டிருந்தார். நேற்று அதிகாலை மறைமலைநகர் அடுத்த பொத்தேரி பேருந்து நிலையம் அருகே வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியின் பின்புறத்தில் மினி லாரி மோதியது. இதில் மினி லாரி ஓட்டுனர் ராஜேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (மார்ச்.21) நடைபெற உள்ளது. இதில் 15க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் கலந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். வேலைதேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
மார்ச் 20ஆம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று காலை 9 மணி அளவில் கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகம் முன்பு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நற்பணி இயக்கம் சார்பில், தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் பறவைகளுக்கு நவதானியம், தண்ணீர் வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார்.
செய்யாறை அடுத்த பூதேரிபுல்லவாக்கத்தை சேர்ந்தவர் கண்ணன் (29). இவர் கவிதா (21) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு 7 மாதத்தில் அபிஷேக் என்ற மகன் உள்ளார்.இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி வீட்டிலிருந்த கவிதா, விஷம் குடித்து மயங்கி உள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின் கவிதா உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சந்தனகோடாங்கி(45) மடப்புரம் கோவில் செல்லும் வழியில் கோடாங்கி அடித்து குறி செல்லி வந்துள்ளார். நேற்று மாலை இவரை தினேஷ்குமார்(27) வெட்டி விட்டு தப்பிச் சென்ற நிலையில் திருப்புவனம் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்தார். போலீசார் தினேஷ்குமாரை கைது செய்த நிலையில், இவரது உறவுக்கார பெண்ணுடன் சந்தனகோடாங்கி தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
நாமக்கல் கோர்ட்டில் மக்கள் நீதிமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் https://namakkal.dcourts.gov.in என்ற வெப்சைட்டில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்திசெய்து, தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நாமக்கல் – 637001 என்ற முகவரிக்கு நாளை (மார்ச் 21) மாலை 5 மணிக்குள் வந்துசேருமாறு, நேரிலோ-தபாலிலோ அனுப்பலாம்.
Sorry, no posts matched your criteria.