India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி அருகே, தேர்வு எழுத சென்ற பிளஸ் 2 மாணவியிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர், போக்சோவில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து புகாரின்பேரில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சரவணன் விசாரணை நடத்தினர். அதில், தேர்வு எழுதிய மாணவியிடம் ஆசிரியர் ரமேஷ், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், அதே அறையில் மற்றொரு மாணவியிடமும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரிந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அரியலூரிலிருந்து திருக்கோவிலூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் மீது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பலத்த காயம் அடைந்த நபர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருவாலங்காடு அருகே, ஜெகதீசன் மனைவி அருணாவுடன் மகளை சந்திக்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பி வரும்பொழுது, அருணாவின் புடவை இருசக்கர வாகன சக்கரத்தில் சிக்கி, வாகனம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் படுகாயமடைந்த அருணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்வம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை தாரர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 31.3.2025-க்குள் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகை (இ. கே.ஒய்.சி.) பதிவு செய்யப் பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அய்யந்தோப்பு கல்லூரி செல்லும் சாலையோரம் தனியார் ரைஸ்மில் அருகே உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக ரோசணை போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, ஆகியவற்றை செலுத்தக்கூறி, மாநகராட்சி சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. மேலும் வார இறுதி நாட்களிலும் வரி வசூல் செய்யப்பட்டது. இந்நிலையில் முறையாக வரி செலுத்தாத, 568 வீடுகளில் குடிநீர் இணைப்பு, துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே வரி செலுத்தாதவர்கள் உடனடியாக வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ், நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 16 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் Staff Nurse, Hospital Worker உள்ளிட்ட பணிகள் காலியாக உள்ளன. இதில் வேலைக்கு ஏற்றார்போல், 12ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு வரும் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கு <
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 22 ஆம் தேதி, காலை 8 மணியளவில், அவினாசி ரோடு, நவஇந்தியாவில் அமைந்துள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பத்தூர், அபாய் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (30) – சுகந்தி (21) தம்பதிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 3ஆவதாக பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் (மார்.18) காலை குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க வைத்துள்ளனர். சிறிது நேரத்தில் குழந்தைக்கு உடல் நிலை மோசமானதாக கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பரமக்குடி தாலுகா, சின்ன நாகாச்சி கிராமத்தை சேர்ந்த ஒரு முதியோர் பிப்ரவரி முதல் உதவி தொகை பெற்று வருகிறார். இதை பெறுவதற்கு தான் பரிந்துரைத்ததாக கூறி சின்ன நாகாச்சி வருவாய் கிராம உதவியாளர் அம்பேத் ராணி புகார்தாரரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அம்பேத் ராணியை ராமநாதபுரம் லஞ்சம் ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.