India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.
தருமபுரியில் உள்ள சென்றாய பெருமாள் கோவில் தமிழகம் முழுவதும் பிரலமான கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது ஒரு ஓவல் வடிவ கோட்டையாகும். இந்த கோவில் அதியமான் மற்றும் தகோதூர் வம்சங்களின் பண்டைய தலைநகராக செயல்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றன. 13ஆம் நூற்றாண்டின் கலைப்படைப்பு கோவிலின் உட்புற குழியின் சுவர்களில் வரிசையாக உள்ளது. இதனை காண்பதற்கு ஒரு நல்ல சுற்றுலா பகுதியாக இருக்கும். ஷேர் பண்ணுங்க
பல்லடம் அருகே பூமலூர் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமாத்தாள் (110) வயது மூப்பால் நேற்று உயிரிழந்தார். கணவர் முத்துசாமி 22 ஆண்டுகளுக்கு முன் காலமானார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள், 44 பேரன், பேத்திகள் உள்ளனர். 2013இல் சதாபிஷேகம் கொண்டாடப்பட்டது. இறுதிச்சடங்கில் ஐந்து தலைமுறையினர் கலந்து கொண்டனர்.
தென்காசி கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு 16 திருக்கரங்களுடன் நரசிம்மர் காட்சி தருகிறார். இங்குள்ள நரசிம்ம தீர்த்தத்தில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். நரசிம்மருக்கு பிரியமான பானகம் படைத்து வணங்கினால் அவரின் முழு அருளும் கிடைக்கும். நரசிம்மரை தியானம் செய்பவர்கள் தம் பகைவர்களை சுலபமாக வெல்லும் திறன் பெறுவர். நீண்ட கால துன்பங்கள் நீங்கும். SHARE IT
சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் கரும்பாலை மேம்பாலத்தில் பெட்ரோல் டேங்கர் லாரி மோதியதில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் மினி லாரி ஓட்டுநர் காயத்துடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து காரணமாக, நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
இந்திய வம்சாவளியைச் சார்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இவரது மனவலிமை, தன்னம்பிக்கை, நிபுணத்துவம் போன்றவை மனிதகுலத்திற்கு புதிய உத்வேகத்தைத் தருகின்றன. சுனிதா வில்லியம்ஸ் நீண்ட ஆயுளோடு நலமாக வாழ புதுச்சேரி ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தி.மலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 21.03.2025 வெள்ளிக்கிழமை அன்று திருவண்ணாமலை மாவட்ட தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
ஈரோடு அடுத்த நசியனூர் – தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் நோக்கி சென்ற ஜான் என்பவரின் காரை மறித்து ரவுடி கும்பல் வெட்டியதில் ஜான் உயிரிழந்தார். அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சதீஷ், சரவணன், பூபாலன் ஆகியோரை காவல்துறையினரால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். இந்நிலையில் பிடிக்கப்பட்ட 4 பேர் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
குலசேகரன்பட்டினத்தில் வரவுள்ள புதிய ராக்கெட் ஏவு தளத்தில் உடன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என சாத்தான்குளம் வர்த்தக சங்கத் தலைவர் கண்ணன் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு மாவட்ட வேலை வாய்ப்பு மையம் இதில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடும்போது உள்ளூர் இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்படலாம் என பதில் தெரிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
பள்ளிகொண்டாவில் மாடு விடும் திருவிழா வருகின்ற ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட மாடுகளுக்கு எண் அட்டைகள் வழங்கப்பட உள்ளதால் மாட்டின் உரிமையாளர்கள் எண் அட்டைகளை நேரில் வந்து விழா குழுவினரிடம் பெற்றுக் கொள்ளும்படி செய்தியை வெளியிட்டுள்ளார்கள். மாடுகளின் எண் அட்டை பெற தொடர்பு கொள்ள :9092621018 என்ற எண்ணெய் தொடர்பு கொள்ளலாம் என்று விழா குழுவினர் கூறியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.