India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் வழியாக செல்லும் கோவை-திருப்பதி-கோவை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் (22616/22615) LHB பெட்டிகள் இணைக்கப்படும் என்றும், இந்த புதிய நடைமுறை வரும் மார்ச் 22- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இதுநாள் வரையில் சாதாரண மற்றும் டீலக்ஸ் பேருந்துகளில் பயணிக்க மட்டுமே பயண அட்டைகள் இருந்ததன. ஆனால் இப்போது AC பேருந்துகளிலும் பயணிக்கும் வகையில் புதிய ‘விருப்பம்போல் பயணிக்கும் பயண அட்டையை’ மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பயண சலுகை அட்டையின் விலை ரூ.2000. பேருந்தில் பயணிக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 20 ஆம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் தகவல்.
கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (மார்ச் 19) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிப்பு வெளியாகியது . அந்த வகையில் இன்று (மார்ச்.19) இரவு 10 மணி வரை தேனி உட்பட 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிப்பு வெளியாகியது . அந்த வகையில் இன்று(மார்ச்.19) இரவு 10 மணி வரை இராமநாதபுரம் உட்பட 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. *ஷேர்
திருவள்ளூர் நகருக்கே பெருமை சேர்க்கும் விதமாக, புகழ் கூட்டும் விதத்தில் எழுந்தருளியிருக்கிறார் வீரராகவ பெருமாள். சிவபெருமான் இத்தலத்து பெருமாளை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றதாகவும் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீராத நோயால் வருந்துபவர்கள் இத்தலத்தில் 9 கரைகளுடன் அமைந்துள்ள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை தரிசித்தால் நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
செஞ்சி, மறைந்த முன்னாள் எம்.பி குப்புசாமியின் உதவியாளர் குமார் கொலை வழக்கில் தாம்பரம் காவல் உதவி ஆய்வாளர் நெல்சன் தலைமையில் செஞ்சி அடுத்த மேல் ஓலக்கூரில் ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணையில் ரவி என்பவர் குமாரை கடத்தி வந்து கொலை செய்து மேல் ஒலக்கூரில் புதைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ரவியுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு, குமார் உடலைத் தோண்டி விசாரணை நடைபெற்று வருகிறது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட வெறி நாய்களை கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட நெட்டா சோதனை சாவடி வழியாக தமிழ்நாடு எல்லை பகுதியான அரகநாடு கட்டச்சல் பகுதியில் விட்டபோது வாகனத்தை பொதுமக்கள் விரட்டி சென்று சிறைபிடித்தனர். ஒரு சில நாய்கள் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செந்தூர் அருகே உள்ளது காயல்பட்டினம். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி. நகராட்சி அந்தஸ்து பெற்ற இந்த ஊரில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த ஊரில் மருந்துக்கு கூட மதுக்கடைகள் கிடையாது. மதுக்கடைகள் மட்டுமல்ல 60 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த நகராட்சியில் காவல் நிலையமும் இல்லை, இந்த செய்தியை தெரியாதவங்களுக்கு ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.