Tamilnadu

News March 19, 2025

செல்வமகள் சேமிப்பு திட்டம்: திருப்பூர் 2ம் இடம்

image

செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு துவங்குவதில், மாநிலத்தில் 2வது இடத்தை திருப்பூர் தபால் கோட்டம் பெற்றுள்ளது. இதுகுறித்து திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் கூறுகையில், இத்திட்டத்தில் இன்டர்நெட், மொபைல் பேங்கிங், இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் திட்டம் வாயிலாக பணம் செலுத்த முடியும். உங்க வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் உடனே, இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். ( Share பண்ணுங்க)

News March 19, 2025

பிரதம மந்திரி இன்டன்ஷிப் திட்ட பதிவு நீட்டிப்பு

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் முன்னணி நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கும் பிரதம மந்திரி இன்டன்ஷிப் திட்டத்தின்கீழ் மாணவர்கள் பதிவு செய்வதற்கான கால அளவு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் இந்த திட்டத்தில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு வரை பதியலாம்.

News March 19, 2025

சேலம் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்  எங்கு? எப்போது

image

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவர்களுக்கு அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை புதுப்பிக்க திருத்தம் செய்ய வருகின்ற ▶️19ஆம் தேதி ஓமலூர்▶️20 ஆம் தேதி எடப்பாடி ▶️21-ஆம் தேதி சேலம் ▶️22-ஆம் தேதி கொளத்தூர் ▶️24 தேதிஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2025

பேராசிரியரை சரமாரியாக தாக்கிய மாணவர்கள்

image

சென்னை அருகே இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழத்தில் பணிபுரியும் பேராசிரியைக்கு அதே பல்கலைக்கழத்தில் பணிபுரிந்த பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த மாணவர்கள் பேராசிரியரை சரமாரியாக தாக்கினர். பின்னர் பேராசிரியரை பிடித்து தாம்பரம் படூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் பல்கலைகழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

News March 19, 2025

டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும்

image

மாநகராட்சி பட்ஜெட்டில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சிறந்த வாகனப் போக்குவரத்து மேலாண்மைக்காக, டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி பொது மற்றும் தனியார் பங்களிப்பு (Public Private Partnership) முறையில் அமைக்கப்படும். இதனால் வாகன நெரிசல்கள் குறைவதுடன் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News March 19, 2025

ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச். 19) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News March 19, 2025

பெட்ரோல், டீசல் வாகனங்கள் படிப்படியாக மாற்றம்

image

இன்று சென்னை மாநகராட்சியின் நிதி நிலை அறிக்கை ரிப்பன் கட்டிட வளாகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களினால் ஏற்படும் காற்று மாசை குறைக்கும் வகையில் அவை அனைத்தும் படிப்படியாக இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் வகையில் மாற்றம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

News March 19, 2025

நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 500 வீதம் வழங்கப்படும் 

image

சென்னை பெருநகர மாநகராட்சி இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவ மாணவியருக்கு பயணப்படி மற்றும் உணவுப்படி வழங்குதல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மண்டலம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் போது மாணவ மாணவியருக்கு பயணம் மற்றும் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 500 வீதம் வழங்கப்படும் என புதிய அறிவிப்பு.

News March 19, 2025

BREAKING நெல்லை கொலையில் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

image

நெல்லையில் நேற்று முன்னாள் காவலர் ஜாகிர் உசேன் பிஜிலி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று அவரது உறவினர்கள் ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் சம்பந்தம் ஏற்பட்டு உடலை பெற்று கொள்ள சம்மதம் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் நடவடிக்கை மேற்கொள்ளாத டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தற்காலிக பணியிட நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News March 19, 2025

மகப்பேறு மருத்துவமனைகளுக்கு கிருமி நாசினி புகைக்கருவிகள் 

image

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவ சேவைகள் துறையின் கீழ் இயங்கும் 16 நகர்ப்புர சமுதாய நல மையங்கள் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் 3 மகப்பேறு மருத்துவமனைகள் என 19 மருத்துவமனைகளுக்கும் தலா ஒன்று வீதம் 19 கிருமிநாசினி புகைக்கருவிகள் (Fogger Machine) தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்திடமிருந்து (TNMSC) கொள்முதல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!