India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
சென்னை மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
அரியலூரில் ▶️ஆட்டுக்கறி கிலோ 800 ரூபாய்க்கும், ▶️நாட்டுக்கோழி கிலோ 700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும், ▶️பிராய்லர் கோழி கிலோ 220 ரூபாய், ▶️ரோகு மீன் கிலோ 200 ரூபாய், ▶️கட்லா மீன் கிலோ 200 ரூபாய், ▶️நண்டு கிலோ 200 ரூபாய், ▶️இறால் கிலோ 600 ரூபாய், ▶️சங்கரா மீன் கிலோ 400 ரூபாய் என விலை உயர்ந்துள்ளது. உங்கள் பகுதியில் இறைச்சி விலை என்ன மக்களே கமெண்ட் பண்ணுங்க!
புதுச்சேரியில் காவல்துறையில் இருக்கும் 70 Sub-Inspector பணியிடங்களுக்கு நிரப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள் 12.09.2025 தேதிக்குள் இங்கே <
சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று (செப்.07) மாலை 06.00 மணிக்கு சேலம் கடைவீதியில் உள்ள ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயிலில் நடை சாத்தப்படுகிறது. அதேபோல், சேலம் அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் நடை இரவு 07.30 மணிக்கு அடைக்கப்படுகிறது. இக்கோயில்களில் நாளை (செப்.08) சுத்தப்படுத்தி நடை மீண்டும் திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாத காலத்தில் சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்கள், ரயில்களில் பீடி, சிகரெட் பிடித்தவர்கள், பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீ மற்றும் பொருட்கள் எடுத்து வந்த நபர்கள் என மொத்தம் 9,124 பேர் சிக்கினர். இவர்கள் மீது வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 19,000 அபராதம் விதித்து அதனை ஆர்பிஎப் போலீசார் வசூலித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” 5ம் கட்ட சுற்றுப்பயணம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி தருமபுரி மாவட்டத்தில் செப்டம்பர் 17-ம் தேதி தருமபுரி, அரூர், பாப்பிரெட்டிபட்டி பகுதிகளிலும், 18-ம் தேதி பாலக்கோடு, பென்னாகரம் பகுதிகளிளும் பரப்புரை செய்ய உள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (செப்டம்பர்-06) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 207 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 12 மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் காவல் நிலைய புதிய ஆய்வாளராக பால்ராஜ் இன்று 7 /9 /2025 காலை 9.00 மணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டார். இப்பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் ரவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வேண்டுகோள் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் சக காவலர்கள் பொறுப்பேற்ற ஆய்வாளருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 24-ம் தேதியில் இருந்து வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. இதற்காக வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் மராட்டிபாளையம் கிராமத்தில் கிருஷ்ணர் விளையாடி, உறங்கி சென்ற இடமாக நம்பப்படும் ‘கிருஷ்ணன் பாறை’ என்ற இடத்தில் 2 திருக்குடைகளை நிறுவி பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்த திருக்குடைகள் விரைவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எடுத்து செல்லப்படும் என தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.