Tamilnadu

News March 19, 2025

விருதுநகரில் குழந்தைகள் இலக்கியத் திருவிழா

image

விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, பள்ளி மாணவர்களுக்கான குழந்தைகள் இலக்கிய திருவிழா மார்ச்.20, 21 அன்று கிருஷ்ணன்கோயில் லிங்கா குளோபல் பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில் 4 முதல் 7ஆம் வகுப்பு வரை பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News March 19, 2025

சிவகங்கையில் பார்க்க வேண்டிய 10 இடங்கள்

image

சிவகங்கை மக்களே.. சிவகங்கையில் கீழே குறிப்பிட்டுள்ள 10 இடங்களுக்கு போனீங்கனா உங்க Mind Refreshness-க்கு ரொம்பவே உதவியா இருக்கும். மறக்காம விசிட் பண்ணுங்க.. *வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்**பிள்ளையார் பட்டி கோயில்*கீழடி பாரம்பரிய அருங்காட்சியகம்*செட்டியார் மாளிகை*வேலுநாச்சியார் நினைவுச்சின்னம்*ஆயிரம் ஜன்னல் வீடு*கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் *இடை காட்டூர் தேவாலயம்*குன்றக்குடி கோயில்*சிவகங்கை அரண்மனை

News March 19, 2025

நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையை இடமாற்ற திட்டம்

image

நாகர்கோவிலில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. குற்றச் செயலில் ஈடுபட்டு கைதாகும் கைதிகள் இங்கு அடைக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 40 முதல் 50 பேர் வரை கைதிகளை பார்க்க வரும் நிலையில், இங்கு போதிய இடவசதி இல்லாத நிலையில் உள்ளது. அதனால் புதிய சிறைச்சாலை அமைக்க அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ஒரே இடத்தில் 30 ஏக்கர் அளவிற்கு புறம்போக்கு நிலங்களை தேடி வருவதாக கூறப்படுகிறது.

News March 19, 2025

அரியலூர்: முன்னாள் படை வீரர்களுக்கு மருத்துவ முகாம்

image

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாம் 21.03.2025 அன்று காலை 9.00 மணிக்கு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 5 ஆவது தளத்தில் நடைபெற உள்ளது. மேலும் அம்முகாமில் முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் வழங்கப்படும் மருத்துவ நிதியுதவி மற்றும் பிற நிதி உதவிகள் குறித்து விளக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News March 19, 2025

திருச்சியில் கிராம சபை கூட்டம் தேதி மாற்றம்

image

திருச்சி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினமான 23.03.2025 அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டம் பணிகள் போன்ற பல்வேறு பணிகளை இறுதி செய்து கிராம சபையில் தீர்மானமாக வைப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் 29.03.2025 அன்று மாற்றப்பட்டுள்ளது. இதில் மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 19, 2025

பேராசிரியைக்கு பாலியல் தொந்தரவு; துணை முதலவர் கைது

image

வேலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் துணை முதல்வராக பணியாற்றி வருபவர் அன்பழகன்.இவர் அந்தக் கல்லூரியில் பணியாற்றும் 37 வயதுடைய பெண் கவுரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு அன்பழகன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News March 19, 2025

தென்காசி மாவட்ட மழை அளவு விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை தொடங்கி நள்ளிரவு வரை கோடை மழை கொட்டியது. இன்று காலை 7 மணி வரை பெய்த மழை அளவு விவரம் வருமாறு: குத்பாஞ்சான் 55.2 மில்லி மீட்டர், நாராயணபுரம் (பகுதி 2 )54, சொக்கம்பட்டி 54, ஆவுடையானூர் 30, தென்காசி 18.4, குற்றாலம் 17.2, கடையநல்லூர் 12, ஆலங்குளம் 9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News March 19, 2025

பேராசிரியரை சரமாரியாக தாக்கிய மாணவர்கள்

image

சென்னை அருகே இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழத்தில் பணிபுரியும் பேராசிரியருக்கு அதே பல்கலைக்கழத்தில் பணிபுரிந்த பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த மாணவர்கள் பேராசிரியரை சரமாரியாக தாக்கினர். பின்னர் பேராசிரியரை பிடித்து தாம்பரம் படூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் பல்கலைவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

News March 19, 2025

எமரால்டு: மூடநம்பிக்கையின் உச்சக்கட்டம்

image

குந்தா தாலுகா எமரால்டு முதல் தமிழ்நாடு மின்வாரியம் செல்லும் பிரதான சாலையில் மூடநம்பிக்கையின் உச்சகட்டமாக சாலையில் முட்டை, புகையிலை, வெற்றிலை, குங்குமம், மஞ்சள் போன்ற பொருட்களை வைத்துள்ளனர். இந்த வழியாக எமரால்டு பள்ளிக்கு வரும் குழந்தைகளும், எமரால்டு சந்தைக்கு வரும் மக்களும் அச்சத்துடன் நடக்கின்றனர்.

News March 19, 2025

செல்வமகள் சேமிப்பு திட்டம்: திருப்பூர் 2ம் இடம்

image

செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு துவங்குவதில், மாநிலத்தில் 2வது இடத்தை திருப்பூர் தபால் கோட்டம் பெற்றுள்ளது. இதுகுறித்து திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் கூறுகையில், இத்திட்டத்தில் இன்டர்நெட், மொபைல் பேங்கிங், இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் திட்டம் வாயிலாக பணம் செலுத்த முடியும். உங்க வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் உடனே, இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். ( Share பண்ணுங்க)

error: Content is protected !!